Coimbatore: தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள் மேம்பட வேண்டும் எனக் கூறிய பா.ஜ.க. நாகராஜ், மும்மொழிக் கொள்கையை ஏற்காவிட்டால், 2026 தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றார்.
Coimbatore: தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள் மேம்பட வேண்டும் எனக் கூறிய பா.ஜ.க. நாகராஜ், மும்மொழிக் கொள்கையை ஏற்காவிட்டால், 2026 தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றார்.
Published on: February 25, 2025 at 7:30 pm
Updated on: February 25, 2025 at 7:31 pm
கோவை, பிப்.25, 2025: தமிழ்நாடு பாஜக சார்பில் பொதுமக்களுக்கு பட்ஜெட்டின் நன்மைகளை விளக்கும் விதமாக கோவை வடக்கு மாவட்டத் தலைவர் கரு மாரிமுத்து தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் சிறப்பாளராக கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில், விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே நாகராஜ் பேசும்போது, மத்திய அரசு கல்விக்கு பட்ஜெட்டில் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள அரசு பள்ளிகள் மேம்பட வேண்டும். உலகத்தரத்திற்கு இணையாக அரசுப்பள்ளிகளின் கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும். அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களும் உலகத்தரத்திற்கு இணையான கல்வியைப்பெற வேண்டுமென்ற நோக்கோடு மும்மொழிக்கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : பெண் காவலர் மீது பாலியல் தாக்குதல்; அண்ணாமலை கடும் கண்டனம்!
ஐந்தாம் வகுப்பு வரை கட்டாயத்தமிழ் வழியில் அனைத்து பாடங்களையும் கற்க வேண்டும். ஆங்கிலம் மொழிப்பாடமாக இருக்கும். மூன்றாவது மொழியாக தாங்கள் விரும்பும் ஒரு மொழியை மாணவ, மாணவிகள் கற்றுக்கொள்ளலாம். ஆனால் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும். தமிழ் தமிழ் என்று மொழி அரசியல் செய்யும் திமுக இருமொழிக்கொள்கையால் தமிழ்நாட்டில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்றார். தொடர்ந்து, மும்மொழிக்கொள்கையை திமுக அரசு ஏற்க மறுத்தால் வரும் 2026-ல் திமுக அரசுக்கு தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்றார்.
இதையும் படிங்க : கன்னியாகுமரியில் மூன்று நாட்கள் உள்ளூர் விடுமுறை; எந்தெந்த தினங்கள் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com