National Education Policy 2020: மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பணகுடி அருகே மகேந்திரகிரியில் அமைந்துள்ள இஸ்ரோ மையம் முன்பு தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
National Education Policy 2020: மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பணகுடி அருகே மகேந்திரகிரியில் அமைந்துள்ள இஸ்ரோ மையம் முன்பு தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Published on: February 25, 2025 at 7:54 pm
Updated on: February 25, 2025 at 8:06 pm
DMK members protest in front of ISRO office in Mahendigiri: திருநெல்வேலி, பிப்.25, 2025: தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க.வினர் ஆங்காங்கே போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். திருநெல்வேலி உள்பட பல்வேறு ரயில் நிலையங்களில் தி.மு.க.வினர் இந்தி எழுத்துக்களை கறுப்பு பெயிண்ட் ஊற்றி அழித்தனர்.
இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டம் காவல் கிணறு அருகே மகேந்திர கிரியில் அமைந்துள்ள இஸ்ரோ அலுவலக வாசல் முன்பு, தி.மு.க.வினர் மும்மொழிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க மகா சிவராத்திரி 2025: தமிழ்நாட்டில் நாளை வங்கிகள் செயல்படுமா?
தி.மு.க. மாணவரணி அமைப்பாளர் அலெக்ஸ் அப்பாவு தலைமையில் இந்தப் போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்தில் வி.எஸ்.ஆர் ஜெகதீஷ் உள்ளிட்ட பல்வேறு தி.மு.க. நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை 2020ல் மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே திமுக அரசு தெளிவுப்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கை மட்டுமே கடைப்பிடிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், கல்வி நிதி ரூ.2500 கோடியை மத்திய அரசு நிறுத்தியது.
இந்த விவகாரத்தில் திமுக மற்றும் மத்திய அரசு இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக தி.மு.க.வினர் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுகிறேன்.. கனத்த இதயத்துடன் காளியம்மாள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com