TVK Vijay: நம் அரசியல் பயணம் இன்னமும் வலிமையாக தொடரும் என்கிறார் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய். கரூர் பரப்புரை அசம்பாவிதத்துக்கு பிறகு முதன் முறையாக நடிகர் விஜய் வாய் திறந்துள்ளார்.
TVK Vijay: நம் அரசியல் பயணம் இன்னமும் வலிமையாக தொடரும் என்கிறார் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய். கரூர் பரப்புரை அசம்பாவிதத்துக்கு பிறகு முதன் முறையாக நடிகர் விஜய் வாய் திறந்துள்ளார்.
Published on: September 30, 2025 at 6:28 pm
Updated on: September 30, 2025 at 7:18 pm
சென்னை, செப்.30, 2025: கரூரில் சனிக்கிழமை (செப்.27, 2025) நடந்த தமிழக வெற்றிக் கழக பேரணியில் எதிர்பாராத விதமாக கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த விகாரத்தில் நடிகர் விஜய் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், நடிகர் விஜய் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மீதும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பவம் நடந்த 70 மணி நேரத்துக்கு பின்னர் நடிகர் விஜய் முதன் முறையாக விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகர் விஜய் விளக்கம்
இதையும் படிங்க : கரூர் கூட்ட நெரிசல் மரணம்.. த.வெ.க நிர்வாகி மதியழகன் கைது!
அந்த வீடியோவில், “நம்முடைய அரசியல் பயணம் இன்னும் வலிமையாக தொடரும்” என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் கூறினார். மேலும், “சி.எம் சார் என்ன ஏதாவது பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், என்னை என்ன வேண்டும் என்றாலும் பண்ணங்க. அவங்களை விட்டுடுங்க. நான் ஒன்றும் வீட்டில் இருப்பேன் அல்லது அலுவலகத்தில் இருப்பேன். நண்பர்களே, தோழர்களே நம் அரசியல் பயணம் இன்னும் ஸ்டிராங்காக தைரியத்தோட தொடரும்” என்றார்.
நடிகர் விஜயின் தன்னிலை விளக்க வீடியோ சமூக வலைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த வீடியோவில் நடிகர் விஜய், கரூரில் மட்டும் ஏன் இப்படி நடந்தது என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க : அன்பில் மகேஷூக்கு ஆஸ்கார் கொடுக்கலாம்.. அ.தி.மு.க சத்யன்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com