சென்னை மார்ச் 6, 2025: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில், ” திருத்தணியில் பெருந்தலைவர் காமராஜர் பெயரில் அமைந்துள்ள காய்கறி சந்தையை கலைஞர் நூற்றாண்டு சந்தை என பெயர் மாற்றும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.
தொடர்ந்து சீமான் தனது அறிக்கையில், ” திமுக ஆட்சிக்கு வந்தது முதல் கடந்த நான்கு ஆண்டுகளாக புதிதாக திறக்கப்படும் மது கடைகளைத் தவிர, மற்ற முதன்மை அரசு கட்டிடங்களுக்கு முன்னால் முதல்வர் கருணாநிதியின் பெயரைச் சூட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளது.
இது போதாது என்று தமிழ் பெருந்தலைவர்களுக்கு தமிழ்நாட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ள அடையாள சின்னங்களையும் அழித்தொழிக்கும் வகையில் பெயரை மாற்றி பராமரிப்பு என்ற பெயரில் கருணாநிதி பெயரில் திறப்பது எந்த வகையில் நியாயம்? என கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும் இதுதான் திராவிட மாடலா என விணவியுள்ள சீமான், பெருந்தலைவரின் பெயரில் ஏற்கனவே உள்ள சிறு சிறு அடையாளங்களையும் அழித்து ஒழிக்க முயல்வது ஏற்க முடியாத பெரும் கொடுமை.
அண்மையில் பெரம்பலூர் பேருந்து நிலையம் அருகில் உழவர் உரிமை போராளி நாராயணசாமி நாயுடு சிலையை அகற்றி கருணாநிதி சிலையை நிறுவ முயன்ற செயலை கண்டித்து நான் அறிக்கை வெளியிட்டிருந்தேன்.
அதன் பின்னர் அப்படி ஒரு எந்த திட்டமும் இல்லை என திமுக ஊசி முழுகியது. அறம் சார்ந்த நல்லாட்சியின் ஆட்சி அம்மையார் மட்டுமே மக்கள் மனதில் நீங்காது நிலை பெற வேண்டும்.
அது தவிர மக்கள் மறந்து விடுவார்களோ என்ற அச்சத்தில் மற்றவர்களின் அடையாளத்தை அழித்து வழிந்து திணிக்கப்படும் இது போன்ற விளம்பர அடையாளங்கள் மண்ணில் நிலைக்காது.
மக்கள் மனதிலும் நிலைக்காது. எனவே திருத்தணி நகரில் ம. பொ. சி. சாலையில் பெருந்தலைவர் காமராஜர் பெயரில் அமைந்துள்ள காய்கறி சந்தையை கலைஞர் நூற்றாண்டு சந்தை என மாற்றம் செய்யும் முடிவை கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க மும்மொழிக் கொள்கை.. தி.மு.க.வுக்கு பயம்.. தமிழிசை பரபரப்பு பேட்டி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்