Tamilisai Soundararajan: மும்மொழிக் கொள்கை கையெழுத்து இயக்கத்தை பார்த்து தி.மு.க. அரசு அஞ்சுவதாக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
Tamilisai Soundararajan: மும்மொழிக் கொள்கை கையெழுத்து இயக்கத்தை பார்த்து தி.மு.க. அரசு அஞ்சுவதாக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
Published on: March 6, 2025 at 4:21 pm
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் தமிழக பாரதிய ஜனதா கட்சியால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக சென்னையில் தமிழிசை சௌந்தர்ராஜன் கையெழுத்து இயக்கம் நடத்தினார்.
இந்த நிலையில் அவர் போலீசாரால் காக்க வைக்கப் பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தர்ராஜன், ” பொதுமக்கள் அரசியல்வாதிகளை சந்திக்க தடை விதிக்க இவர்கள் யார்? என கேள்வி எழுப்பினார்.
முன்னதாக தமிழக அரசு பள்ளிகளில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாரதிய ஜனதா கட்சி நடத்திவரும் கையெழுத்து இயக்கத்தை பார்த்து திராவிட முன்னேற்றக் கழகம் பயப்படுகிறது என்றார்.
தொடர்ந்து பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன், ” தமிழக பாரதிய ஜனதா கட்சியினர் நடத்தி வரும் கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொள்ள போலீசாரின் அடக்குமுறைகளை மீறி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்த கையெழுத்து இயக்கத்துக்கு ஆதரவாக ஆன்லைனில் லட்சக்கணக்கானோர் கையெழுத்திட்டு உள்ளனர். மு க ஸ்டாலின் அரசு இதை பார்த்து பயப்படுகிறது. பாமர மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு இன்னொரு மொழி கற்றுக் கொள்ள வேண்டும் என ஆர்வத்துடன் போலீசாரின் அராஜகத்தையும் மீறி கலந்து கொண்டனர்.
அந்த பொது மக்களுக்கு நான் என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என தனது இரு கைகளையும் கூப்பி தமிழிசை சவுந்தரராஜன் வணக்கம் தெரிவித்தார். இதையடுத்து தமிழக மக்கள் எங்களுடன் இருக்கிறார்கள் என்பதை நான் இன்று உணர்ந்து கொண்டேன் எனக் கூறிய தமிழிசை சௌந்தர்ராஜன் பாரதிய ஜனதா கட்சி தமிழுக்காக உயிரைக் கூட கொடுக்க தயாராக இருக்கிறது என்றார்.
மும்மொழி கொள்கைக்கு திமுக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்கு பல்வேறு கட்சிகளும் ஆதரவளித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க எத்தனை மொழி படிக்க வேண்டும் என்பதை மாணவன் தான் தீர்மானிக்க வேண்டும்.. சரத்குமார் பரபரப்பு கருத்து!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com