Anbumani Ramadoss: “மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு 9 மாதங்களாகியும் இழப்பீடு வழங்காமல் துரோகம் செய்வது தான் திராவிட மாடல் ஆட்சியின் கொள்கையா?” என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Anbumani Ramadoss: “மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு 9 மாதங்களாகியும் இழப்பீடு வழங்காமல் துரோகம் செய்வது தான் திராவிட மாடல் ஆட்சியின் கொள்கையா?” என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Published on: September 19, 2025 at 7:42 pm
சென்னை, செப்.19, 2025: பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், “காவிரி பாசன மாவட்டங்களில் ஒன்றான மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் பெய்த கனமழையில் சேதமடைந்த ஒன்றரை லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான நெற்பயிர்களுக்கு இன்று வரை இழப்பீடு வழங்கப்படவில்லை. உழவர்கள் கடன் வாங்கி விளைவித்த பயிர்கள் சேதமடைந்த நிலையில், அவற்றுக்கான இழப்பீட்டைக் கூட வழங்க திமுக அரசு மறுப்பது கண்டிக்கத்தக்கது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது 40 ஆயிரத்துக்கும் கூடுதலான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேதமடைந்தன. அதைத் தொடர்ந்து நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் பருவம் தவறி பெய்த மழையில் ஒரு லட்சத்து பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன.
இதையும் படிங்க : விஜய் வீட்டில் வெடிகுண்டு.. ?மோப்ப நாயுடன் போலீசார் சோதனை!
பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அப்போதே நான் வலியுறுத்தியிருந்தேன்.
இந்நிலையில், தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தின் ஒரு கட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நான் வந்துள்ள நிலையில், என்னை சந்தித்த விவசாயிகள் சங்கத் தலைவர்கள், நெற்பயிர்கள் பாதிகப்பட்டு 9 மாதங்களுக்கு மேலாகியும் இன்று வரை தங்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை என்று தெரிவித்தனர்.
மேலும், உணவு படைக்கும் கடவுள்களான விவசாயிகளின் வாழ்வில் திமுக அரசு விளையாடக்கூடாது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலும், நடப்பாண்டு ஜனவரி மாதத்திலும் பெய்த மழையில் பாதிக்கப்பட்ட பயிர்கள் முழுமைக்கும் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வீதம் உடனடியாக இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் உழவர்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை நடத்த பாட்டாளி மக்கள் கட்சி தயங்காது” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : ‘நண்பர் ரோபோ சங்கர்’.. த.வெ.க தலைவர் விஜய் இரங்கல்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com