Narendra Modi Madurai visit: தமிழ்நாட்டில் நமது ஆட்சி அமைந்ததும் போதை மாஃபியாக்கள் சிறைக்குச் செல்வார்கள் என பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்தார்.
Narendra Modi Madurai visit: தமிழ்நாட்டில் நமது ஆட்சி அமைந்ததும் போதை மாஃபியாக்கள் சிறைக்குச் செல்வார்கள் என பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்தார்.

Published on: March 2, 2026 at 10:04 am
மதுரை மார்ச் 22026; தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளில் பொதுக்கூட்டம் மதுரையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று அங்கு வழிபாடு நடத்தினார்.
இந்த நிலையில் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி,” திமுக அரசின் தவறுகளால், திருப்பரங்குன்றம் பிரச்சனை நடந்துள்ளது; இந்த பிரச்சனையில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் வெளிக் கொண்டு வரப்படுவார்கள். திமுகவின் நேர்மையற்ற தன்மை காரணமாகவே இந்த பிரச்சனை நடந்துள்ளது. இந்த விவாகாரத்தில் உண்மை வெளி கொண்டுவரப்படும்.” என்றார்.
திமுக கனவு காணல் நீராக..
மேலும் சிலர் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடலாம் என கனவு காண்கிறார்கள் அவர்களின் கனவு காணும் நீராக போகும் என மு க ஸ்டாலினை மறைமுகமாக பெயர் குறிப்பிடாமல் விமர்சித்து பேசினார்.
தொடர்ந்து திமுக தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்து வெளியேற வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள் எனக் கூறிய பிரதமர் நரேந்திர மோடி அதனை நான் உங்கள் கண்களில் பார்ப்பதாக தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு
தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது எனக் கூறிய பிரதமர் நரேந்திர மோடி, ” தமிழ்நாட்டில் பெண்கள் மிகப் பெரிய பிரச்சனைகளை சிக்கி இருக்கிறார்கள்; பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. மது பழக்கத்தால் குடும்பங்கள் சீரழிகின்றன. மதுவால் தங்கள் குடும்பம் சீரழிவதை பார்த்து பெண்கள் கலங்குகின்றனர்” என்றார்.
தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு நான் உறுதி அளிக்கிறேன் எனக் கூறிய பிரதமர் நரேந்திர மோடி, ” நமது ஆட்சி அமைந்ததும் போதைப் பொருள் மாப்பிள்ளை சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் உறுதிபட தெரிவித்தார்.
இதையும் படிங்க; 210 தொகுதிகளில் வெல்வோம்.. மதுரையில் எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு பேச்சு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com