Selvaperunthagai MLA: “செய்தியாளரை பார்த்து உங்கள் கேமராவில் விரிசல் உள்ளது. தி.மு.க, காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் இல்லை” என்றார். மேலும், முதலமைச்சர் காபி, தயிர் வடை கொடுத்தார்கள்” எனவும் செல்வபெருந்தகை கூறினார்.
Selvaperunthagai MLA: “செய்தியாளரை பார்த்து உங்கள் கேமராவில் விரிசல் உள்ளது. தி.மு.க, காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் இல்லை” என்றார். மேலும், முதலமைச்சர் காபி, தயிர் வடை கொடுத்தார்கள்” எனவும் செல்வபெருந்தகை கூறினார்.
Published on: September 27, 2025 at 4:11 pm
Updated on: September 27, 2025 at 4:27 pm
சென்னை, செப்.27, 2025: தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காங்கிரஸ் எம்.பி.க்களை இன்று (சனிக்கிழமை) சந்தித்துப் பேசினார். இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது திமுக காங்கிரஸ் கூட்டணியில் விரிசலா என்ற கேள்விக்கு, “உங்கள் கேமராவில்தான் விரிசல் உள்ளது.. திமுக கூட்டணியில் விரிசல் இல்லை” என்றார். முன்னதாக, காங்கிரஸ் எம்.பி.க்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்ப குறித்து பேசினார்.
கன்னியாகுமரியில் விமான நிலையம்…
#WATCH | “உங்கள் கேமராவில்தான் விரிசல் உள்ளது.. திமுக கூட்டணியில் விரிசல் இல்லை”
— Sun News (@sunnewstamil) September 27, 2025
அண்ணா அறிவாலயத்தில் காங்கிரஸ் எம்.பி.க்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்த பிறகு செல்வப்பெருந்தகை பேட்டி#SunNews | #DMKAlliance | #Congress | @SPK_TNCC pic.twitter.com/WUwjcrflaj
அப்போது கன்னியாகுமரி எம்.பி விஜய் வசந்த் தனது தொகுதிக்கு விமான நிலையம் கோரியுள்ளார், திருநெல்வேலி எம்.பி ராபர்ட் புரூஸ் தாமிபரணி ஆறு தொடர்பான கோரிக்கையை வழங்கியுள்ளார்“ என்றார்.
கரூர் எம்.பி எங்கே?
தொடர்ந்து, கரூர் எம்.பி எங்கே எனக் கேட்டார். அப்போது சிரித்துக் கொண்டே ஜோதிமணி வந்தார். தொடர்ந்து பேசிய செல்வபெருந்தகை, முதலமைச்சர் எங்களது கோரிக்கைகளை கனிவோடு கேட்டு காபி கொடுத்தார். தயிர் வடை கொடுத்தார், சாப்பிட்டோம்” என்றார்.
மேலும், “எப்படி இருக்கீங்க என தாயுள்ளதோடு எங்களை பார்த்து மகிழ்ச்சியோடு முதலமைச்சர் உரையாடினார்” என்றார்.
இதையும் படிங்க : ஓ.பி.எஸ் தவறை உணர்ந்தார்.. ஆனால் பழனிசாமி? டி.டி.வி தினகரன் பரபரப்பு பேட்டி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com