விருதுநகர், பிப்.8, 2026: தென்தமிழ்நாட்டின் எஃகு மனிதர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என கனிமொழி எம்.பி புகழாரம் சூட்டியுள்ளார். தி.மு.க இளைஞரணி மாநாடு விருதுநகரில் சனிக்கிழமை (பிப்.7, 2026) நடைபெற்றது.
மு.க. ஸ்டாலின் பேச்சு
இந்த மாநாட்டில் பேசிய மு.க ஸ்டாலின், “எல்லா ரேங்குகளிலும் தமிழ்நாடுதான் டாப்; சூப்பர் ஸ்டார்; அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முன்னேற்றம் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நாம் செய்தது போல சாதனைகளை 5 ஆண்டுகளில் செய்தது உண்டா?” எனக் கேள்வியெழுப்பினார்.
மேலும், “வேறு எந்த மாநிலத்திலும் இத்தனை திட்டங்கள், பயனாளிகள் இருக்க முடியாது என கெத்தாக சொல்லலாம்” எனக் கூறிய கனிமொழி எம்.பி., ‘அடிமைகளும், துரோகிகளும் எதிரிகளுடன் சேர்ந்துகொண்டு ஒட்டுமொத்த மாநிலத்தின் சுயமரியாதையை அடகு வைக்க முயற்சி செய்கிறார்கள் அதனால்தான் தமிழ்நாடு தலைகுனியாது என்று சொல்லக்கூடிய தெம்பும், திராணியும் கொண்டிருக்கக்கூடிய ஒரே இயக்கமாக திமுக இருக்கிறது” என்றார்.
என்.டி.ஏ பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி குறித்து விமர்சித்த கனிமொழி, “தமிழகத்துக்கு ஜீரோ சொன்னவர்களை எதிர்க்காமல் பாஜகவின் கிளைச் செயலராக மாறியிருக்கிறார் பழனிசாமி. எடப்பாடி பழனிசாமி இப்போது என்.டி.ஏ. பழனிசாமியாக மாறியிருக்கிறார்.
நானும் ரௌடிதான் என்று சொல்வதுபோல நான்தான் கூட்டணிக்கு தலைமை என புலம்புகிறார். 100 நாள் வேலைத் திட்ட சட்டத்தின் பெயரை படித்தாரா, அதைப் பற்றி பழனிசாமிக்கு தெரியுமா? எனவும் கேள்வியெழுப்பினார்.
மேலும், ஓனரை மிஞ்சிய லேபராக இருக்கிறார் பழனிசாமி; அவர்கள் கூட்டணியின் டிசைனைப் பாருங்கள். * பதவி கொடுத்தவரை கட்சியிலிருந்து நீக்கியவர் பழனிசாமி; போன தேர்தலில் பிரிந்தோர் இப்போது சேர்ந்துள்ளனர்.
தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் தமிழ்நாட்டுக்கும் மோதல்; இதில் தமிழ்நாட்டை நாம் ஜெயிக்க வைக்க வேண்டும்” என்றார்.
கனிமொழி பேச்சு
முன்னதாக பேசிய கனிமொழி, “துரோகத்தோடு கை கோத்துக் கொண்டு நமக்கு எதிராக ஒரு கூட்டணி உருவாகியிருக்கிறது. தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை நிறுத்தி வைத்துள்ள – துரோகத்தோடு கூட்டணி வைத்துள்ளனர்; தேர்தல் வருகிறது என்றாலும் தமிழ்நாட்டுக்கு அள்ளி அல்ல கிள்ளிகூட கொடுக்க மாட்டேன் என ஒரு கூட்டணி இருக்கிறது.
ட்ரம்ப் உடன் வர்த்தக ஒப்பந்த மாற்றத்தை கொண்டு வருவதாக பிரதமர் மோடி சொல்கிறார். ஆனால் நாம் அனுப்பக்கூடிய பொருட்களுக்கு அமெரிக்காவில் 18% வரி; அங்கிருந்து வரக்கூடிய பொருட்களுக்கு வரியே கிடையாது.
இது எதற்கும் பிரதமர் மோடி பதில் சொல்லமாட்டார். உழைப்பு, உழைப்பு… என்ற வார்த்தைக்கு உதாரணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் மு.க ஸ்டாலின். பாசிச சக்திகளை எதிர்க்கக்கூடிய தலைவரும் நான்தான் என்ற உறுதியோடும் வாழ்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்” என்றார் கனிமொழி.
இதையும் படிங்க: மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு. பிப்.12 தி.மு.க. ஆர்ப்பாட்டம்!
IPL 2026: 50 Matches,12 Cities: ஐபிஎல் 2026 இரண்டாம் கட்ட அட்டவணை வெளியாகியுள்ளன. இந்தப் போட்டிகள், 12 நகரங்களில் 50 போட்டிகளாக நடைபெறவுள்ளன….
Finance & Appropriation Bills Cleared: பாராளுமன்றம் நிதி மசோதா மற்றும் ஒதுக்கீட்டு மசோதா 2026-ஐ அங்கீகரித்துள்ளது….
Assembly Election 2026: 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி பகுதியில் போட்டியிடவில்லை; அவர் போட்டியிடும் தொகுதி எது…
Political commentator Ponraj: தமிழக பெண்கள் குறித்து இழிவாக பேசிய நிலையில் அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மன்னிப்பு கூறியுள்ளார்….
Assembly Election 2026: அண்டா, குண்டா, மிக்ஸி எல்லாம் தரமாட்டேன் என சீமான் அதிரடியாக பரப்புரை மேற்கொண்டார்….
Assembly Election 2026: மாநிலத் தலைநகர் சென்னையை குறிவைத்து நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் களம் காண்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது; தமிழக வெற்றிக் கழகத்தின்…