TVK political party meeting in Karur: ‘கரூர் துயர சம்பவம் குறித்து அரசியல் கருத்துக்கள் எதுவும் இல்லை” என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், விசாரணை ஆணையத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
TVK political party meeting in Karur: ‘கரூர் துயர சம்பவம் குறித்து அரசியல் கருத்துக்கள் எதுவும் இல்லை” என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், விசாரணை ஆணையத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Published on: September 28, 2025 at 12:00 pm
கரூர், செப்.28, 2025: 39 உயிர்களைப் பலிகொண்ட கரூர் கூட்ட நெரிசல் குறித்து அரசியல் ரீதியாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கப் போவதில்லை என்றும், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையத்தின் முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தார்.
இரவு முழுவதும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சிந்திய கண்ணீரும், அவர்களது துக்கம் நிறைந்த அழுகுரல் ஏற்படுத்திய வலியும் என் நெஞ்சத்திலிருந்து அகலவில்லை… #KarurTragedy pic.twitter.com/Z9K2TZs7NW
— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) September 28, 2025
இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், “”நான் எந்த அரசியல் கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை. ஆணையத்தின் முடிவுகளின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படும்” என்றார்.
இதையும் படிங்க : கரூர் விஜய் பேரணியில் 39 பேர் மரணம்.. கட்சி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு!
மேலும், முதற்கட்ட அறிக்கைகள், நடிகர்-அரசியல்வாதி விஜய் கைது செய்யப்படலாம் என்ற ஊகங்கள் மற்றும் நிகழ்வுக்கு காவல்துறை அனுமதித்த இடம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் அவர் பதிலளித்தார்.
இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நபர்களின் உடல்நிலை குறித்தும் மு.க ஸ்டாலின் கேட்டறிந்தார். மொத்தம் 51 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 26 பேர் ஆண்கள் என்றும் 25 பேர் பெண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மு.க. ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு
(நன்றி ஏ.என்.ஐ)
“ஒரு அரசியல்கட்சி கூட்டத்தில் 39 உயிர்களை இழந்துள்ளோம். இதுபோன்ற துயரம் இதுவரை நடந்ததில்லை. இனியும் நடக்க கூடாது. இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்படும்” என்றார்.
இதையும் படிங்க : கரூர் விஜய் பேரணியில் 39 பேர் மரணம்.. உயிரிழந்தவர்களின் முழு விவரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com