அதிமுக எடப்பாடி பழனிச்சாமி கட்டுப்பாட்டில் இல்லை என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். மேலும், விஜய்-கிஷோர் சந்திப்பு குறித்தும் அவர் பதிலளித்தார்.
அதிமுக எடப்பாடி பழனிச்சாமி கட்டுப்பாட்டில் இல்லை என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். மேலும், விஜய்-கிஷோர் சந்திப்பு குறித்தும் அவர் பதிலளித்தார்.
Published on: February 13, 2025 at 6:46 pm
கடந்த காலங்களைப் போன்று தற்போதும் அதிமுகவில் உள்ள உள்கட்சி பிரச்சனைகள் ஊடக வெளிச்சத்தில் சிக்கி உள்ளன. அதிமுகவின் சீனியர் அமைச்சர்களும் ஒருவரான செங்கோட்டையன், அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் அதிமுக எடப்பாடி பழனிச்சாமியின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லை என திமுக மூத்த தலைவரும் சட்டத்துறை அமைச்சருமான ரகுபதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அமைச்சர் ரகுபதி, ” இபிஎஸ் கட்டுப்பாட்டில் அதிமுக இல்லை; செங்கோட்டையன் தனது மன குமரலை வெளிப்படுத்தி உள்ளார். அவர் அதிருப்தியில் இருப்பது தெரிய வருகிறது” என்றார்.
மேலும் திமுக தொண்டர்களிடம் கட்சியின் வாக்கு சதவீதத்தை உயர்த்த வேண்டும் எனவும் ரகுபதி கேட்டுக்கொண்டார். இது பற்றி பேசிய ரகுபதி, ” தமிழக மக்கள் திமுகவுக்கு எதிரான மனநிலையில் இல்லை என்பது கருத்து கணிப்புகள் மூலம் தெரிய வருகிறது; திமுகவின் வாக்கு வங்கியை மேலும் உயர்த்த நாம் உழைக்க வேண்டும்” என்றார்.
விஜய்- பிரசாந்த் கிஷோர் சந்திப்பு
இதையடுத்து அமைச்சர் ரகுபதி, தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் குறித்து பேசினார். அண்மையில் நடிகர் விஜய்யை அவரது பனையூர் அலுவலகத்தில் பிரபல அரசியல் நிபுணரான பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேசி இருந்தார்.
தமிழ்நாட்டில் இந்த சந்திப்பு அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதைத்தொடர்ந்து பிரசாந்த் கிஷோர் பேசுகையில், ” தமிழக வெற்றிக்கழகத் தொண்டர்கள் வீட்டிற்கு ஒரு வாக்கினை உறுதி செய்ய வேண்டும்” என்றார்.
மேலும் நடிகர் விஜயின் கட்சிக்கு 10 முதல் 15 சதவீதம் வரை வாக்குகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். பிரசாந்த் கிஷோரின் இந்த பேச்சுக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்தும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதிலளித்தார்.
அப்போது, ” விஜய் பிரசாந்த் கிஷோர் சந்திப்பால், மாற்றங்கள் ஏற்படாது; மாறாக ஏமாற்றங்கள் மிஞ்சும்” என்றார்.
இதையும் படிங்க பள்ளிகளில் பாலியல் தொந்தரவு.. கல்விச் சான்றிதழ் ரத்து.. அமைச்சர் மகேஷ் அதிரடி உத்தரவு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com