Chennai | டெல்லி-சென்னை இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த பெண்ணை சக பயணி சில்மிஷம் செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர், 45 வயதான ராஜேஷ் சர்மா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர், மார்பிள் டைல் லேயர் தொழில் செய்துவருகிறார்.
மேலும், இவர் அக். 9-ம் தேதி சென்னை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும் அவர் கைது செய்யப்பட்டார் என்ற தகவலும் தற்போது வெளியாகி உள்ளது. பாதிக்கப்பட்ட பெண் ஜெய்ப்பூர் மற்றும் டெல்லிக்கு பயணம் செய்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின் இருக்கையில் அமர்ந்திருந்த சர்மா, பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து பேசிய காவல்துறை அதிகாரி, “அவளுக்குப் பின்னால் அமர்ந்திருந்த குற்றம் சாட்டப்பட்டவர், விமானத்தின் போது தகாத முறையில் அவளைத் தொட்டதாக புகாரில் கூறப்பட்டுள்ளது” என்றார். மேலும், உள்ளூர் போலீசார் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்க பெண்ணுக்கு உதவியதை அடுத்து, விசாரணை நடந்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க : திருநெல்வேலியில் 4 பேர் மீது குண்டாஸ்: வழக்கு என்ன?
Actor Krishna arrested: போதைப் பொருள் பயன்பாடு வழக்கில் நடிகர் கிருஷ்ணா போலீசாரால் கைது செய்யப்பட்டார்….
Alankulam: திருநெல்வேலியை அடுத்த ஆலங்குளத்தில் பெண்ணை அவரது கணவர் அவரது கணவர் வெட்டி படுகொலை செய்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்….
Radhapuram: ராதாபுரம் அருகே சட்டவிரோதமாக எம். சாண்ட் மணலை கடத்தியதாக லாரி ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்….
Man arrested for snatching chain: திசையன்விளையில் ஆசிரியையிடம் தங்கச் சங்கிலி பறித்த திருடன் போலீசாரால் விரைந்து கைது செய்யப்பட்டார்….
Bihar : பெண்ணின் அந்தரங்க உறுப்பில் மிளகாய் பொடி தூவி கொடுமைப்படுத்திய அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.
…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்