தூத்துக்குடியில் 12ஆம் வகுப்பு மாணவி கொடூர கொலை..6 தனிப்படைகள் அமைப்பு

Thoothukudi: தூத்துக்குடியில் 12ஆம் வகுப்பு மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Published on: March 12, 2026 at 11:31 am

தூத்துக்குடி, மார்ச் 12 2026: தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே வேடநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவி.

இவர் குறுக்கு சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டை விட்டு வெளியே சென்ற மாணவி இரவு நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இரவு முழுவதும் தேடி கிடைக்காததால் குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை காட்டுப் பகுதியில் முகம் மற்றும் உடலில் காயங்களுடன் மாணவி பிணமாக கிடந்தார். ஆடைகள் கிழிந்த நிலையில் இருந்ததோடு கழுத்தை துணியால் இருப்பதற்கான அடையாளங்களும் இருந்தன. உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவி தனியாக செல்வதை கவனித்து மர்ம நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து அறிந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலையில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அவர்கள் நேற்று முன்தினம் இரவு மாணவி மாயமானதுடன் குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம் அவர்கள் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு செல்லுமாறு அலைகழித்தனர் அங்கு மீண்டும் குளத்தூர் போலீஸ் நிலையம் செல்லுமாறு கூறி அலைகழித்தனர்.

போலீசார் இரவிலேயே தேடி இருந்தால் மாணவியை உயிருடன் காப்பாற்றி இருக்கலாம். கொலை செய்த கொலையாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிடவில்லை. இரவுக்குள் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

இந்நிலையில் கொடூர சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக நெல்லை சரக டிஐஜி சரவணன் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் சந்தேகத்தின் பேரில் 10 பேரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும், சிசிடிசி காட்சிகள் கொண்டு தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாணவி கொலை தொடர்பாக முறையாக விசாரணை நடத்தவில்லை என புகார் எழுந்ததை தொடர்ந்து மகளிர் காவல் ஆய்வாளர் பிரவீணாவை சஸ்பெண்ட் செய்து தூத்துக்குடி எஸ்பி மதன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதையும் படிங்க: மேற்கு ஆசியாவில் பணிபுரியும் 593 தமிழக மீனவர்கள்.. மீட்பதில் சிக்கல், நீதிமன்றத்தில் மத்திய அரசு!

நாகர்கோவில் அஞ்சலகத்தில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் பல லட்சம் மோசடி? பரபரப்பு தகவல்கள்! Sukanya Samriddhi Fraud at Nagercoil PO

நாகர்கோவில் அஞ்சலகத்தில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் பல லட்சம் மோசடி? பரபரப்பு தகவல்கள்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com