Bail to Maha Vishnu | சென்னையில் உள்ள பள்ளி ஒன்றில் நடந்த சொற்பொழிவில் ஆன்மிக பேச்சாளர் மகா விஷ்ணு கலந்துகொண்டார். அப்போது அவர் மறுபிறப்பு குறித்து பேசிய வார்த்தைகள் சர்ச்சையாகின.
இதற்கு மாற்றுத்திறனாளி ஆசிரியர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதையடுத்து இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் தொடர்பான காணொலி காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகின. இந்த நிலையில் மகா விஷ்ணு கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து அவர் ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. மகா விஷ்ணு-ஆசிரியர் வார்த்தை மோதல் மாநிலம் முழுக்க பெரும் பரபரப்பாக பேசப்பட்டது என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க
M.K. Stalin: ரூ.1.6 கோடி மதிப்பிலான ஏ.சி பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்துவைத்தார்….
Chennai: அடுத்த 45 நாள்களுக்கு சென்னை மின்சார ரயில் சேவையில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன….
hydroponic ganja seized at Chennai airport: சென்னை விமான நிலையத்தில் ரூ.23 கோடி கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….
Chennai Tragedy: சென்னை சோழிங்கநல்லூரில் தாய்-மகன் உயிரிழந்த நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டனர்….
Autorickshaw Race in chennai: சென்னை அருகே ஆட்டோ ரேஸில் ஈடுபட்டதாக 11 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்….
Teachers protest: 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு திமுக அளித்த 311 வது வாக்குறுதியை நிறைவேற்ற கோரி சென்னையில் ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்