Radhapuram: ராதாபுரம் அருகே சட்டவிரோதமாக எம். சாண்ட் மணலை கடத்தியதாக லாரி ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்.
Radhapuram: ராதாபுரம் அருகே சட்டவிரோதமாக எம். சாண்ட் மணலை கடத்தியதாக லாரி ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்.
Published on: June 24, 2025 at 11:00 am
திருநெல்வேலி, ஜூன் 24 2025: ராதாபுரம் அருகே சட்ட விரோதமாக எம். சாண்ட் மணல் ஏற்றி சென்றவரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீசார் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “ராதாபுரம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட மருதப்பபுரம் ஜங்ஷன் அருகே உதவி ஆய்வாளர் சகாய ராபின் ஷாலு தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு, பலுகல்லை சேர்ந்த ராஜேஷ் (45) என்பவர் ஓட்டி வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது உரிய அனுமதி சீட்டு இன்றி சட்டவிரோதமாக எம். சாண்ட் (M.SAND)-ஐ ஏற்றிவந்தது தெரியவந்தது.
இந்த நிலையில், மேற்படி உதவி ஆய்வாளர் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உரிய அனுமதி சீட்டு இல்லாமல் M.SAND-ஐ ஏற்றி வந்த ராஜேஷை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து சுமார் 30 டன் எடையுள்ள எம். சாண்ட் மணலையும், ஒரு லாரியையும் பறிமுதல் செய்தனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க :சர்ச் சென்ற ஆசிரியை.. கண்ணிமைக்கும் நேரத்தில் செயின் பறித்த திருடன்.. திசையன்விளையில் பரபரப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com