இந்திய மக்களை நேசித்த இரும்பு மனிதர் ரத்தன் டாடா: ஜவாஹிருல்லா இரங்கல்

Jawahirullah | “இந்திய மக்களை நேசித்த இரும்பு மனிதர் ரத்தன் டாடா மறைவுக்கு இரங்கல்” என மனித நேய மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

Published on: October 10, 2024 at 4:36 pm

Jawahirullah | மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் இரங்கல் செய்தியில், “இந்திய மக்களை நேசித்த இரும்பு மனிதர் ரத்தன் டாடா மறைவுக்கு இரங்கல்” எனத் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும், “ஒரு நூற்றாண்டு கடந்து இந்திய பொருளாதாரத்திலும் மக்கள் வாழ்வியலிலும் இரண்டறக் கலந்த டாட்டா நிறுவனத்தை வழி நடத்திய ரத்தன் டாட்டா அவர்களின் மறைவு பெரும் துயரத்தை தருகின்றது.

அறவழியில் வணிகம் செய்ய வேண்டுமென்ற நாட்டம் கொண்டவர். இவரது நிறுவனம் மது தயாரிப்பு, சிகரெட் உற்பத்தி தவிர மற்ற பொருட்களை தயார் செய்தது. இந்தியர்கள் அனைவரும் ஏதாவது ஒரு வகையில் டாட்டா நிறுவனத்தின் பொருளை பயன்படுத்தாமல் இருக்க மாட்டார்கள்.

தனது நிறுவனங்களில் தொழிலாளர்களின் உரிமையைப் பேணுவதில் மற்ற நிறுவனங்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தவர். தனது வருவாயின் பெரும் பகுதியை மக்களின் நலனுக்காக செலவிட்டவர். ஆசியாவிலேயே பெரிய புற்றுநோய் மருத்துவமனையை மும்பையில் நிறுவி நடத்தி வந்தவர்.

பங்குச் சந்தையில் மிக அதிக சந்தை முதலீடு கொண்டதாக டாடா குழுமம் திகழ்கிறது. இவரது வழிகாட்டுதலில் டாடா கன்சல்டன்சி சர்வீஸ் பொது நிறுவனமானது. டைம் இதழ் வெளியிட்ட உலகின் செல்வாக்கு படைத்த 100 பேர் பட்டியல் மற்றும் உலகின் சக்திவாய்ந்த நபர்கள் பட்டியலில் இடம்பெற்றவர். கொரோனா பேரிடர் காலத்தில் 500 கோடி ரூபாயை மக்கள் நலப் பணிக்காக செலவிட்டவர்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் தொழில்துறை நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க  தொழிலதிபர் ரத்தன் டாட்டா மறைவு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com