Vijay: “தமிழ்நாட்டில் அமைதிப் புரட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது; வீடு தோறும் விஜய் முழக்கம் திகழ்கிறது” என ஜே.சி.டி பிரபாகர் தெரிவித்துள்ளார்.
Vijay: “தமிழ்நாட்டில் அமைதிப் புரட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது; வீடு தோறும் விஜய் முழக்கம் திகழ்கிறது” என ஜே.சி.டி பிரபாகர் தெரிவித்துள்ளார்.

Published on: January 2, 2026 at 11:24 pm
சென்னை ஜனவரி 2, 2026: தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக திகழ்ந்தவர் ஜே.சி.டி பிரபாகர். இவர் நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய்யை சந்தித்து, அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
எம்ஜிஆரை பார்த்தது போல்..
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “புரட்சித்தலைவர் எம்ஜிஆரை பார்த்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சியை போல், விஜய்யை பார்த்த போதும் மகிழ்ச்சியை உணர்ந்தேன்” என்றார். தொடர்ந்து பேசிய ஜே.சி.டி பிரபாகர், ” தமிழ்நாட்டில் ஓர் அமைதிப் புரட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது; ஒவ்வொரு வீட்டிலும் விஜய் கொண்டாடுகிறார்கள். ஒவ்வொரு வீதிகளிலும் விஜய் முழக்கம் ஏற்பட்டு வருகிறது” என்றார்.
மேலும் தமிழ்நாட்டுக்கு ஓர் மாற்றம் தேவை என கூறிய ஜே.சி.டி பிரபாகர், ” தமிழ்நாட்டிற்கு ஒரு மாற்றம் தேவை என்பதற்காகவே நான் விஜயுடன் இணைந்துள்ளேன்” என்றார். ஜே.சி.டி பிரபாகர், புகழேந்தி மற்றும் கே சி பழனிச்சாமியுடன் இணைந்து அதிமுக ஒருங்கிணைப்பு குழுவிலும் செயல்பட்டு வந்தார். 2011 சட்டமன்ற தேர்தலில், ஜே.சி.டி பிரபாகர் சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு 10 ஆயிரத்து 782 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க; திமுகவின் அடிமை கூடாரமாக தமிழக காங்கிரசை மாற்ற முயற்சி.. செல்வ பெருந்தகை மீது நிர்வாகி பரபரப்பு குற்றச்சாட்டு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com