Health Minister Ma Subramanian: தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 57 ஆயிரம் பேருக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
Health Minister Ma Subramanian: தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 57 ஆயிரம் பேருக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
Published on: April 16, 2025 at 1:53 pm
Updated on: April 16, 2025 at 1:55 pm
சென்னை ஏப்ரல் 16 2025: தமிழ்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், தமிழகத்தில் எத்தனை பேருக்கு ஹெச்ஐவி பாதிப்பு உள்ளது என்பது குறித்த தகவலை நேற்று (ஏப்ரல் 15 2025) சட்டப்பேரவையில் வெளியிட்டார்.
அப்போது அவர், ” தமிழ்நாட்டில் 1.57 லட்சம் பேர் ஹெச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 76 கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்கள் மூலம், எச்ஐவி பாதிப்பாளர்களுக்கு மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன” என்றார்.
தொடர்ந்து கடந்த ஆண்டுகளில் எச்ஐவி பாதிப்பாளர்களின் குழந்தைகளின் கல்வி மற்றும் மருத்துவச் செலவுக்காக ரூபாய் 5 கோடி வைப்பு நிதி கொடுக்கப்பட்டது என்றும் தற்போது இந்த நிதி ரூபாய் 25 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார். அமைச்சரின் கூற்றுப்படி தமிழ்நாட்டில் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட 18 வயதுக்கு உட்பட்ட 7618 குழந்தைகளின் கல்வி மற்றும் மருத்துவச் செலவுக்காக ரூபாய் 1.81 கோடி செலவிடப்பட்டுள்ளது.
மேலும் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், எச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மாதம் தோறும் உதவித்தொகை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். முன்னதாக சட்டப்பேரவையில் இது தொடர்பான கேள்வியை கடையநல்லூர் அதிமுக எம்எல்ஏ கிருஷ்ண முரளி முன் வைத்தார். இதற்கு பதில் அளித்து தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் பதிலளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பொன்முடி ஆபாச பேச்சு விவகாரம்.. சென்னை கமிஷனர் அலுவலகத்தில் மனு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com