Kanniyakumari | G.K Vasan | “தமிழ்நாட்டில் தற்போதைய நிலை ஊழல்,குடும்ப ஆட்சி, இவைகளுக்கெல்லாம் முடிவு கட்ட வேண்டும்” என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் கூறினார்.
Kanniyakumari | G.K Vasan | “தமிழ்நாட்டில் தற்போதைய நிலை ஊழல்,குடும்ப ஆட்சி, இவைகளுக்கெல்லாம் முடிவு கட்ட வேண்டும்” என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் கூறினார்.
Published on: September 18, 2024 at 1:17 pm
Kanniyakumari | G.K Vasan | கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று (செப்.18, 2024) நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மாநிலத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜி.கே. வாசன் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் தற்போதைய நிலை ஊழல்,குடும்ப ஆட்சி, இவைகளுக்கெல்லாம் முடிவு கட்ட வேண்டும்” என்றார். மேலும், “மக்கள் பிரச்னைகளை முன்வைத்து கட்சியினர் சீரிய பணியை ஆற்ற வேண்டும்” என்றார்.
இது குறித்து ஜி.கே. வாசன், “தமிழகத்தினுடைய தற்போதைய நிலை ஊழல்,குடும்ப ஆட்சி ஆகும். இவைகளுக்கெல்லாம் முடிவு கட்ட வேண்டும் என்றால் தமிழ் மாநில காங்கிரஸ் ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருக்கக்கூடிய நிலை ஏற்பட வேண்டும். அதற்கு நிர்வாகிகள் மக்கள் பிரச்சினைகளை முன் வைத்து சீரிய பணியை ஆற்ற வேண்டும்” என்றார். மேலும் கட்சி நிர்வாகிகளுக்கு அவர் ஆலோசனைகளை வழங்கினார்.
இதையும் படிங்க : தமிழகத்தில் நடப்பது மக்களாட்சியா, மணல் கடத்தல் ஆட்சியா? அன்புமணி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com