ஈரோடு அருகே சாதியப் பாகுபாடு.. பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இருவரை காலில் விழ வைத்த அவலம்!

Erode Caste Discrimination: ஈரோடு அருகே சாதியப் பாகுபாடு காரணமாக தலித் சமூகத்தைச் சேர்ந்த இருவரை காலில் விழ வைத்த அவலம் நிகழ்ந்துள்ளது. இதுதொடர்பான அதிர்ச்சிகர வீடியோக்கள் வைரலாகியுள்ளன.

Published on: October 10, 2026 at 1:52 pm

ஈரோடு, அக்.10, 2026: தமிழகத்தின் ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே உள்ள பெரும்பள்ளி கிராமத்தில், பொது மயானத்தில் இறுதிச்சடங்கு நடத்துவதில் ஏற்பட்ட பிரச்சினையால் தலித் சமூகத்தைச் சேர்ந்த இருவர், ஆதிக்கச் சாதியினரின் காலில் விழுந்து கெஞ்சியதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி, வயது முதிர்வு காரணமாக 90 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் கிராமத்தில் உள்ள மயானத்துக்குக் கொண்டு சென்றபோது, மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழியைத் தடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தின்போது, தலித் சமூகத்தைச் சேர்ந்த இருவர் மற்றவர்களின் காலில் விழுந்து கெஞ்சுவது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயானப் பயன்பாட்டில் நீண்டகாலப் பிரச்சினை:

பெரும்பள்ளி கிராமத்தில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த சுமார் 100 பேர் வசித்து வருவதாக வருவாய்த் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்பகுதியில் உள்ள மயானத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக நீண்டகாலமாகப் பிரச்சினை நிலவி வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு முன்பு, பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்காக அருகிலுள்ள திங்கலூர் பகுதிக்கு எடுத்துச் செல்ல வேண்டிய நிலை இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், பொதுமயானத்தில் அடக்கம் செய்ய முயன்றபோது, எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் இனி உள்ளூரில் வேலை தேடி வரக்கூடாது என மிரட்டியதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் உள்ள நில உரிமையாளர்களைச் சார்ந்து கூலி வேலை செய்து வாழும் குடும்பங்கள், வேலைவாய்ப்பு பறிபோகும் அச்சத்தில் இருந்ததாகவும், இதன் காரணமாகவே இருவர் காலில் விழுந்து கெஞ்சியதாகவும் கூறப்படுகிறது. இதனால், இறந்தவரின் உடலை அடக்கம் செய்வதற்குக்கூட சாதி அடிப்படையில் தடைகள் ஏற்படுத்தப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு:

இந்தச் சம்பவம் தொடர்பாக, பெருந்துறை வருவாய் ஆய்வாளர் அளித்த புகாரின் அடிப்படையில் திங்களூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இருவர் மீது பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம், 1989-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இறுதியில், போலீசார் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளின் பாதுகாப்பு மற்றும் மேற்பார்வையில் முதியவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களைப் பெற்றுள்ள நிலையில், சாதிப் பாகுபாட்டைத் தடுக்கவும், அனைத்து சமூகத்தினருக்கும் பொது மயானங்களைப் பயன்படுத்தும் உரிமையை உறுதி செய்யவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இதையும் படிங்க : அரசு அதிகாரிகள் சொத்து விவரங்களை காட்டினால் மட்டுமே பதவி உயர்வு.. தமிழ்நாடு அரசு அதிரடி!

புதுச்சேரி இடைத்தேர்தல்: டெபாசிட் இழந்த தி.மு.க.. மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்ட வேட்பாளர்!
Puducherry By-Election

புதுச்சேரி இடைத்தேர்தல்: டெபாசிட் இழந்த தி.மு.க.. மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்ட வேட்பாளர்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com