Edappadi Palaniswami | தலைமை செயலகத்தில் பெண் செய்தியாளர் மிரட்டப்பட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
![ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்](https://dravidantimes.com/wp-content/uploads/elementor/thumbs/Air-india-express-qzgfrz3uwic5xvtqaing9mfg1dx9vr5kwapxfio77s.png)
February 6, 2025
Edappadi Palaniswami | தலைமை செயலகத்தில் பெண் செய்தியாளர் மிரட்டப்பட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Published on: September 13, 2024 at 12:51 pm
Edappadi Palaniswami | தமிழ்நாட்டில் பெண் செய்தியாளர் மிரட்டப்பட்ட விவகாரத்திற்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் பெண் செய்தியாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “ஆதிதிராவிடர் நலத்துறைச் செயலாளர் திருமதி. லட்சுமி பிரியா இ.ஆ.ப. அவர்கள் பேட்டி கொடுக்க தலைமைச் செயலகத்திற்கு அழைத்த நிலையில், பேட்டியின் இடையில் பெண் செய்தியாளர் லதா, அரசு அதிகாரி வெற்றிச்செல்வன் என்பவரால் மிரட்டப்பட்டு செயலாளர் அறையிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
தமிழ்நாட்டில் பெண் செய்தியாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை- முதலமைச்சர்
— Edappadi K Palaniswami – Say No To Drugs & DMK (@EPSTamilNadu) September 12, 2024
மு.க.ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும்!
ஆதி திராவிடர் மாணவர் விடுதிகளின் அவல நிலை குறித்து செய்திகள் வெளியான நிலையில், அதுகுறித்த விளக்கம் தருவதாக பெண் செய்தியாளர் லதா என்பரை தலைமைச்செயலகத்தில் ஆதிதிராவிடர்… pic.twitter.com/DN5iWsFvGC
பெண் செய்தியாளரை மிரட்டிய அரசு அதிகாரிகள் மற்றும் துறைச் செயலாளர் ஆகியோர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், அதிகார மமதையோடு ஊடகங்களை ஒடுக்க நினைக்கும் முயற்சிகளை கைவிடுமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், “ஊடகச் சுதந்திரம்”, “கருத்துச் சுதந்திரம்” என்றெல்லாம் வாயளவில் மட்டுமே பேசும் விடியா திமுக முதல்வர், ஊடகங்களின் செயல்பாட்டை முடக்க முயல்வதுற்கும், மிரட்டுவதுற்கும் எனது கடும் கண்டனங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ரூ.21 கோடி ஒதுக்கீடு: அம்மா உணவகங்களை மேம்படுத்த டெண்டர்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com