Congress MP Manickam Tagore | தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு கொள்கையை கொண்டுவருவதற்கான சாத்தியம் அதிகம் உள்ளதாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், மதுவிலக்கு என்பது காந்தியும் காமராஜரும் என காங்கிரஸ் கட்சியின் ஆட்சி இருந்தவரை தமிழகத்தில் மது என்பது இல்லை. காங்கிரஸ் கட்சியின் ஆட்சி மீண்டும் வந்தால் மது இல்லாமல் இருக்கும். இப்போது இருக்கும் காலத்தில் காங்கிரஸ் கட்சி கூட்டணி கட்சியாக உள்ளது. காங்கிரஸ் கட்சியை பொருத்தவரை காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு தொண்டனுடைய குறிக்கோளும் மதுவை ஒழிப்பது.
ஆனால் அரசியல் பலம் என்பது வேறு கொள்கையின் ஈடுபாடு என்பது வேறு. அரசியல் பலத்தை பொறுத்தவரை மக்களின் எண்ணங்கள் எப்போது மாறுகின்றதோ, மக்கள் எப்போது எங்களுடைய உண்மையாக எண்ணத்தை புரிந்து கொள்கிறார்களோ, எப்போது எங்களுடைய வலிமையை புரிந்து கொள்கிறார்களோ அன்று காங்கிரஸ் கட்சியை பொறுத்தமட்டில் மீண்டும் இந்த கொள்கையை கொண்டுவருவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாக உள்ளது என்றார்.
கடந்த சில வாரங்களாக விசிக -வின் மது விலக்கு தொடர்பான வாதங்கள் தி.மு.க. – வி.சி.க. கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ள நிலையில், காங்கிரஸ் அமைச்சரின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் புதிய புயலை கிளப்பி உள்ளது.
இதையும் படிங்க
Vijay vasanth MP: தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு என்பது காங்கிரஸின் விருப்பம் ஆகும் என காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் எம்.பி கூறியுள்ளார்….
Congress Selva Perundhagai : “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியை ‘பிச்சைக்காரன்’ என்று இழிவுபடுத்துவது, ஒரு தனிநபரை பழிக்கிற செயல் மட்டுமல்ல, இது கோடிக்கணக்கான ஏழை மற்றும் விளிம்புநிலை…
Shashikant MP: த.வெ.க தலைவர் விஜய் பேச்சில் ஆரம்பத்தில் இருந்தே குறைந்தப்பட்ச மாண்பு இல்லை எனக் கூறியுள்ளார் சசிகாந்த் எம்.பி…
Selvaperunthagai : தமிழக அமைச்சரவையில் பங்கு கேட்கும்படி காங்கிரஸ் தலைமை இதுவரை சொல்லவில்லை என காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்….
Trichy Velusamy: தி.மு.க.வை பார்த்து தனித்து நிற்க முடியுமா எனக் கேளுங்கள் என கொந்தளித்துப் பேசினார் காங்கிரஸின் திருச்சி வேலுசாமி….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்