Udhayanidhi Shirt Issue | உதயநிதி ஆடை விவகாரம் குறித்து புதிதாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Udhayanidhi Shirt Issue | உதயநிதி ஆடை விவகாரம் குறித்து புதிதாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Published on: November 14, 2024 at 2:20 pm
Udhayanidhi Shirt Issue | சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம் சத்திய குமார் என்பவர், ” அரசு விழாக்களில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுக சின்னம் பொறித்த டீ சர்ட் உடன் கலந்து கொள்கிறார்.
இதன் மூலம், 2019 ஆம் ஆண்டு மாநில அரசு பிறப்பித்த அதிகாரப்பூர்வ ஆடை குறியீட்டை அவர் மீறுகிறார். ஆகவே அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் உதயநிதி ஸ்டாலின் உரிய ஆடையில் கலந்து கொள்ள உத்தரவிட வேண்டும்” என குறிப்பிட்டு வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இதுகுறித்து அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், வக்கீல் பிரவீண் சமாதானம் என்பவர் “அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் கட்சி சின்னத்துடன் டி-சர்ட் அணிந்து துணை முதலமைச்சர் கலந்து கொண்டால், அது தி.மு.க. சார்பில் நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி போல் தோற்றத்தை ஏற்படுத்தும். இதன்மூலம் அவர் கட்சிக்கு ஆதாயம் தேடுகிறார். எனவே, கட்சி சின்னத்துடன் டி-சர்ட் அணிய உதயநிதி ஸ்டாலினுக்கு தடை விதிக்க வேண்டும்” என சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், ஒரே விவகாரத்திற்காக எத்தனை வழக்குகள் தாக்கல் செய்யப்படும் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இடையீட்டு மனுதாரராக சேர்க்கக் கோரி விண்ணப்பிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டு, புதிய வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதையும் படிங்க திமுக சின்னம் பொறித்த டி-ஷர்ட்; உதயநிதி ஆடை விவகாரம்: அரசு பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com