வண்ணங்களின் திருநாள் வாழ்வை வண்ணமயமாக்கட்டும்: அன்புமணி ராமதாஸ் ஹோலி வாழ்த்து

Anbumani Ramadoss: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள ஹோலி வாழ்த்து செய்தியில் வண்ணங்களின் திருநாளான ஹோலி வாழ்வை வண்ணம் ஆகட்டும் என்று தெரிவித்துள்ளார்.

Published on: March 3, 2026 at 1:04 pm

Updated on: March 3, 2026 at 1:05 pm

சென்னை, மார்ச் 3 2026: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், வண்ணங்களின் திருநாளாகவும், வசந்தத்தின் அடையாளமாகவும் கருதப்படும் ஹோலி திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளமார்ந்த ஹோலி திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஹோலி திருநாள் கொண்டாடப்படுவதன் நோக்கமே மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் தான். வசந்தகாலத்தின் தொடக்கத்தில் வரும் முழுநிலவு நாளில் தான் ஹோலி கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டு மக்கள் ஹோலியை கொண்டாடுவதில்லை என்றாலும் அது கொடுக்கும் மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் இதுவரை அனுபவித்து வந்த கொடுமைகள் அனைத்துக்கும் முடிவு கட்டப்பட்டு, இனி வரும் காலம் தமிழக மக்களுக்கு வண்ணமயமாக அமைய ஹோலி வகை செய்யட்டும்.

உலகில் அமைதி, ஒற்றுமை, மகிழ்ச்சி, நல்லிணக்கம், சகோதரத்துவம், வளம் உள்ளிட்ட அனைத்தும் செழிக்க ஹோலி வகை செய்ய வேண்டும் என்று கூறி மீண்டும் ஒரு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நாங்குநேரி இரட்டை கொலை..எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்

தவறான ரயிலில் ஏறிவிட்டால் துன்பப்படுவதை விட இறங்குவது மேலானது.. விவாகரத்து குறித்து ஹன்சிகா மோத்வானி
Hansika Motwani

தவறான ரயிலில் ஏறிவிட்டால் துன்பப்படுவதை விட இறங்குவது மேலானது.. விவாகரத்து குறித்து ஹன்சிகா

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com