Karur stampede case: கரூர் துயரச்சம்பவம் தொடர்பாக நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் திங்கள்கிழமை 7 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.
Karur stampede case: கரூர் துயரச்சம்பவம் தொடர்பாக நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் திங்கள்கிழமை 7 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.

Published on: January 12, 2026 at 9:08 pm
புதுடெல்லி ஜனவரி 12, 2026; நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவர் ஆன விஜய், 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி சனிக்கிழமை கரூரில் பரப்புரை வாகனத்தில் பேரணி சென்றார்.
அப்போது அவரைக் காண ரசிகர்கள்- தொண்டர்கள் என பலர் கூடி இருந்தார்கள். இதனால், கூட்டம் மிகப்பெரிய அளவில் காணப்பட்டது. இந்த நிலையில், ரசிகர்களின் கூட்டத்திற்கு நடுவே விஜயின் பரப்புரை வாகனம் நத்தை போல் மெல்ல மெல்ல ஊர்ந்து சென்றது.
ஒரு வழியாக விஜயின் வாகனம், பரப்புரை இடத்திற்கு நீண்ட தாமதத்திற்கு பின்னர் சென்ற நிலையில் விஜய் பேசத் தொடங்கினார்; அப்போது, அங்கு திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பரப்புரை வாகனத்தின் மீது நின்று விஜய் பேசிக் கொண்டிருந்தபோதே, கூட்ட நெரிசல் எதிர்பாராத விதமாக ஏற்பட்டது. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் பெண்கள் உட்பட 41 பேர் தங்களின் இன்னுயிரை இழந்தார்கள்; மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தார்கள்.
இதையும் படிங்க: கரூர் கூட்ட நெரிசல் மரணம்.. சிபிஐ முன் ஆஜரான தமிழகத்தின் உயர் அதிகாரி!
இந்த வழக்கை சிபிஐ விசாரணை செய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் என் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் கரூர் மாவட்ட தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளிடம் சிபிஐ அதிகாரிகள் டெல்லி அலுவலகத்தில் விசாரணை நடத்தினார்கள்.

இந்த நிலையில் இன்று காலை சிபிஐ அதிகாரிகள், நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவருமான விஜையிடம் விசாரணை நடத்தினார்கள். சிபிஐ விசாரணைக்கு ஆஜராக சென்னையில் இருந்து தனி விமானம், டெல்லிக்கு விஜய் வந்திருந்தார். டெல்லி விமான நிலையம் வந்திருந்த அவர் காரின் மூலமாக புதுடெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்குச் சென்றார்.
இதையும் படிங்க: கரூரை விட விஜய்க்கு டெல்லியில் பாதுகாப்பு.. வானதி சீனிவாசன்!
அங்கு அவரிடம் சிபிஐ அதிகாரிகள் கிட்டத்தட்ட ஏழு மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்; இந்த விசாரணையின் போது கரூர் பேரணியின் போது செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு உட்பட இதர ஏற்பாடுகள் குறித்தும், அந்தக் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாகவும் பல்வேறு கேள்விகளை கேட்டார்கள்.
இதற்கு விஜய் தரப்பில் உரிய பதில் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது; மேலும் கூட்ட நெரிசல் நிகழ்ந்த போது, அங்கு நடந்த விஷயம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என விஜய் பதில் அளித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய், டெல்லியில் ஹோட்டல் ஒன்றில் தங்கி உள்ளார்; ஆகவே அவர் நாளையும் விசாரணைக்கு ஆஜராகலாம் என கூறப்படுகிறது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விஜயிடம் விசாரணை நடைபெற்ற நிலையில், அவர் அளித்த வாக்குமூலத்தை, எழுத்துப்பூர்வமாகவும் சிபிஐ அதிகாரிகள் பெற்றுக் கொண்டதாக தகவல்கள் கூடுகின்றன.
அந்த வகையில் விஜய் இடம் முழுமையான விசாரணை நடைபெற்று அதன் பின்னர் இந்த வழக்கில் சிபிஐ அதிகாரிகள், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திமுகவின் 311-வது வாக்குறுதி என்னாச்சு..? சென்னையில் ஆசிரியர்கள் போராட்டம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com