நாகையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 8ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாகையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 8ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Published on: December 12, 2024 at 10:51 am
Updated on: December 12, 2024 at 11:43 am
Nagai accident | நாகை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு பெய்த கனமழையில் செம்பியன் மகாதேவி கிராமத்தில் முருகராசு என்பவரின் கூரை வீட்டு பக்கவாட்டுச் சுவர் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த முருகராசு அவரது மனைவி, மகன் மற்றும் மகள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.
அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அவர்கள் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே முருகராசுவின் 8-ம் வகுப்பு படிக்கும் மகன் கவியழகன் பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த மற்ற 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க தி.மலை கார்த்திகை தீபத் திருவிழா : 850 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com