Bomb threat to M K Stalins house : சென்னையில் உள்ள தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வீடு மற்றும் பா.ஜ.க அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Bomb threat to M K Stalins house : சென்னையில் உள்ள தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வீடு மற்றும் பா.ஜ.க அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Published on: October 3, 2025 at 12:08 pm
சென்னை, அக்.3, 2025: சென்னையில் உள்ள தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் வீடு, மாநில பாஜக தலைமையகம் மற்றும் தென்னிந்திய நடிகை த்ரிஷாவின் வீடு ஆகியவற்றை குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.முன்னதாக, சென்னை தேனாம்பேட்டை பகுதியில் உள்ள த்ரிஷாவின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகப் புகார் அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து மோப்ப நாய்களைப் பயன்படுத்தி போலீசார் சோதனை நடத்தினர். இந்நிலையில், தமிழக ஆளுநரின் இல்லத்திற்கும் இதேபோன்ற மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாக பல தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், இந்த வார தொடக்கத்தில் சென்னை நீலாங்கரையில் உள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. கரூரில் நடந்த அவரது அரசியல் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததை அடுத்து, அவரது இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :விஜய் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது.. தி.மு.க.வுக்கு அரசியல் தெரியும்.. எஸ்.வி சேகர்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com