தமிழகம் முழுவதும் உள்ள 171 அரசுக் கல்லூரிகளில் 7,360 கௌரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு சம்பள உயர்வு எப்போது என தமிழ்நாடு பா.ஜ.க. மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை கேள்வியெழுப்பி உள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள 171 அரசுக் கல்லூரிகளில் 7,360 கௌரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு சம்பள உயர்வு எப்போது என தமிழ்நாடு பா.ஜ.க. மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை கேள்வியெழுப்பி உள்ளார்.
Published on: February 11, 2025 at 10:23 pm
Updated on: February 11, 2025 at 10:28 pm
7,360 கௌரவ விரிவுரையாளர்களுக்கு சம்பள உயர்வு எப்போது? என தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை கேள்வியெழுப்பி உள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் உள்ள 171 அரசுக் கல்லூரிகளில் 7,360 கௌரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் ஆண்டுக்கு 11 மாத காலம் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில், தொகுப்பு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.
நிரந்தரப் பணியில் இருப்பவர்கள் ஊதியம் சுமார் 80,000 ரூபாயாக இருக்கையில், முறையான தகுதியின் அடிப்படையில் தேர்வான கௌரவ விரிவுரையாளர்களுக்கான தொகுப்பு ஊதியம் வெறும் ரூ.20,000 முதல் ரூ.25,000 மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
இவர்களுக்கு, பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைத்த ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று தமிழக பாஜக சார்பில் திமுக அரசை வலியுறுத்தினோம். ஆனால் இதுவரை, ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை.
உரிய தகுதியுடன் பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளர்கள், அனைவருக்கும் ரூ.50,000 ஊதியம் வழங்கக் கூறி சென்னை உயர்நீதிமன்றம் 21.3.2024 அன்று தீர்ப்பளித்திருக்கிறது.
பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகளை பின்பற்றித்தான் கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம் நடைபெற்றுள்ளது.
இதற்கிடையில், கடந்த மூன்று மாதங்களாக, கௌரவ விரிவுரையாளர்களுக்கான முதல் மாத ஊதியமே இன்னும் வழங்கப்படவில்லை எனச் செய்திகள் வெளிவந்துள்ளன.
எனவே, எந்தவித காலதாமதமும் இல்லாமல், ஒவ்வொரு மாதமும் கௌரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியத்தை, அந்தந்த மாத இறுதியில் வழங்க வேண்டும்.
ஐந்து ஆண்டுகளுக்கு மேல் கௌரவ விரிவுரையாளர்களாகப் பணிபுரியும் தகுதி வாய்ந்தவர்களை நியமிக்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க சென்னை வருகிறார் ராகுல் காந்தி.. பயண திட்டம் என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com