Annamalai : திமுக அரசு, இனியாவது தூய்மைப் பணியாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்யுமா? எனக் கேள்வியெழுப்பியுள்ளார் தமிழ்நாடு பா.ஜ.க. முன்னாள் தலைவர் கு. அண்ணாமலை.
Annamalai : திமுக அரசு, இனியாவது தூய்மைப் பணியாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்யுமா? எனக் கேள்வியெழுப்பியுள்ளார் தமிழ்நாடு பா.ஜ.க. முன்னாள் தலைவர் கு. அண்ணாமலை.
Published on: September 23, 2025 at 1:34 pm
சென்னை, செப்.23, 2025: தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் கு. அண்ணாமலை விடுத்துள்ள அறிக்கையில், “திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில், பாதாள சாக்கடையைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு தூய்மைப் பணியாளர்கள், விஷவாயு தாக்கி உயிரிழந்திருக்கும் செய்தி, மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் குடும்பத்தினருக்கு உடனடியாக, தலா ₹40 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென்று, திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “தமிழகத்தில், போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாமல், கையுறை கூட வழங்கப்படாமல், தூய்மைப் பணியாளர்கள் சாக்கடையைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். விஷவாயு தாக்கி உயிரிழக்கும் தூய்மைப் பணியாளர்கள் எண்ணிக்கையில், தமிழகம் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருக்கிறது.
இதையும் படிங்க : கூடுகிற கூட்டம் கண்டிப்பாக ஓட்டாக மாறாது.. கமல்ஹாசன்
கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும், சுமார் 50 பேர் தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர். ஆனால், திமுக அரசு இது குறித்து எந்தக் கவலையும் இல்லாமல், வீண் விளம்பரங்களுக்குச் செலவு செய்து கொண்டிருக்கிறது. தூய்மைப் பணியாளர்களுக்கு, போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்ற எண்ணம் திமுக அரசுக்கு வருவதற்கு, இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோக வேண்டும்?
சென்னை ஐஐடி மாணவர்கள், தூய்மைப் பணியை மேற்கொள்ள, ஹோமோசெப் மற்றும் சிப்பாய் ஆகிய இரண்டு ரோபோக்களைக் கண்டுபிடித்துள்ளனர். இவற்றைப் பயன்பாட்டில் கொண்டு வர ஏன் திமுக அரசு இத்தனை ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? தனது தந்தைக்குச் சிலை வைக்க, மக்கள் வரிப்பணத்தைச் செலவு செய்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு நேரமும் நிதியும் இருக்கிறது. தூய்மைப் பணியாளர்களுக்குத் தேவையான கருவிகள் வாங்க நிதி இல்லையா?
சமூகநீதி என்று உதட்டளவில் பேசி நாடகமாடும் திமுக அரசு, இனியாவது தூய்மைப் பணியாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்யுமா?” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : அரசியலுக்கு 6 மாதம் கால்ஷீட்.. விஜய்யை தாக்கிய ஆளூர் ஷாநவாஸ்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com