Annamalai | மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் தொடர்பான வீடியோ வெளியான நிலையில் அண்ணாமலை மன்னிப்பு கூறியுள்ளார்.

September 1, 2025
Annamalai | மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் தொடர்பான வீடியோ வெளியான நிலையில் அண்ணாமலை மன்னிப்பு கூறியுள்ளார்.
Published on: September 13, 2024 at 3:56 pm
Annamalai | கோவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு பேசிய நிகழ்ச்சியில் ஹோட்டல் சங்கத் தலைவர் சீனிவாசன் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
ஜி எஸ் டி குறித்து அவர் பேசிய வரிகள் சர்ச்சையாக்கப்பட்டன. அதாவது பன்னுக்கு ஜிஎஸ்டி இல்லை ஆனால் க்ரீமுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இதனால் தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. இதனை சரி செய்ய மத்திய அமைச்சர் முன்வரவேண்டும் என அவர் பேசியிருந்தார்.
இது சிலரால் திரித்து வெளியிடப்பட்டதாக பாஜகவினர் கூறி வந்தனர். இந்த நிலையில் அன்றைய தினம் இரவே சீனிவாசன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து விளக்கம் அளித்து இருந்தார்.
இந்த விளக்கம் தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் வீடியோ வெளியானதற்கு மன்னிப்பு கேட்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
On behalf of @BJP4TamilNadu, I sincerely apologise for the actions of our functionaries who shared a private conversation between a respected business owner and our Hon. FM.
— K.Annamalai (@annamalai_k) September 13, 2024
I spoke with Thiru Srinivasan Avl, the esteemed owner of the Annapoorna chain of Restaurants, to express…
இது குறித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில் அண்ணாமலை, ” மரியாதைக்குரிய ஹோட்டல் உரிமையாளரும், நிதி அமைச்சரும் பேசிய வீடியோ கட்சி நிர்வாகிகளால் வெளியிடப்பட்டதற்கு தமிழக பாஜக தலைவர் என்ற முறையில் நான் மன்னிப்பு கூறுகிறேன்” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்த விவகாரத்தில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ” அவர் ஜெனரஞ்சகமாக பேசினார்; அதை நான் பெரிது படுத்தவில்லை” எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ராசிபுரம் பேருந்து நிலையம் மாற்றமா? ஊழல் விசாரணை தேவை: அன்புமணி ராமதாஸ்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com