Amit shah: உதயநிதி முதல்வராக்குவது தான் ஸ்டாலின் ஒரே குறிக்கோள் என அமித்ஷா குற்றம் சாட்டினார்.
Amit shah: உதயநிதி முதல்வராக்குவது தான் ஸ்டாலின் ஒரே குறிக்கோள் என அமித்ஷா குற்றம் சாட்டினார்.

Published on: April 19, 2026 at 1:30 pm
ஈரோடு ஏப்ரல் 19, 2026; ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சிவகிரி என்ற பகுதியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ரோடு ஷோ நடத்தினார்.
அப்போது பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ” அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்த உடன் திமுக அரசின் ஊழல்கள் குறித்து விசாரணை நடத்தப்படும்” என்றார்.
உதயநிதி விவகாரம்
தொடர்ந்து பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “மு.க ஸ்டாலின் ஒரே குறிக்கோள் உதயநிதியை முதலமைச்சர் ஆக்குவதுதான்” என குற்றம் சாட்டினார்.
மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ்நாடு இழந்த பெருமைகள் மீட்கப்படும் என உறுதி அளித்த அமித் ஷா, ” அதிமுகவுடன் இணைந்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வெற்றி கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது” எனவும் கூறினார்.
மயிலாப்பூரில் ரோட் ஷோ
உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மாலை 5 மணிக்கு சென்னை மயிலாப்பூர் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் ஆதரித்து ரோட் ஷோ நடத்துகிறார்.
சட்டமன்றத் தேர்தல்
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறுகிறது; இதில் பதிவான வாக்குகள் மே மாதம் நான்காம் தேதி, எண்ணிக்கை செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதையும் படிங்க; பணகுடி வருகிறார் ராஜ்நாத் சிங்.. பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து பரப்புரை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com