Actor Vijays TVK Partys second year inauguration ceremony: நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரத்தில் 2025 பிப்ரவரி 26 ஆம் தேதி புதன்கிழமை நடைபெறுகிறது.
Actor Vijays TVK Partys second year inauguration ceremony: நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரத்தில் 2025 பிப்ரவரி 26 ஆம் தேதி புதன்கிழமை நடைபெறுகிறது.
Published on: February 25, 2025 at 11:38 pm
சென்னை பிப்ரவரி 25, 2025: தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் நடிகர் விஜய் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என கூறப்படுகிறது. இது அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜயுடன் பிரபல தேர்தல் வியூக கணிப்பாளர் பிரசாந்த் கிஷோரூம் பங்கேற்பார் என கூறப்படுகிறது.
இது மட்டுமின்றி இந்தக் கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா, ஜான் ஆரோக்கியசாமி உள்ளிட்டோரம் கலந்து கொள்கின்றனர்.
இதையும் படிங்க மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு.. இஸ்ரோ அலுவலகம் முன்பு தி.மு.க. போராட்டம்!
இந்த மாநாட்டைப் பொருத்தவரை 2021 தேர்தல் பணிகளை அமைக்கும் ஓர் கூட்டமாகவே இருக்கும் என கருதப்படுகிறது. தொடர்ந்து இந்தக் கூட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் 95 மாவட்ட செயலாளர் துணைச் செயலாளர்கள் மற்றும் தலைவர்கள் மாவட்ட பொறுப்பாளர்கள் என கிட்டத்தட்ட 1000 பேர் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பான பயிற்சியை பிரசாந்த் கிஷோர் வழங்குவார் என்றும் கூறப்படுகிறது. அதாவது எதை நோக்கி தேர்தலை சந்திக்க வேண்டும்? எப்படி மக்களை அணுக வேண்டும்? மற்ற கட்சிகளிடமிருந்து நம்மை எப்படி வேறுபடுத்தி காட்ட வேண்டும் என்பன போன்று பல்வேறு பயிற்சிகள் அவர் வழங்குவார் என கூறப்படுகிறது.
இதற்கிடையில் கட்சி நிர்வாகிகள் தங்களின் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு கூட்டத்தில் பங்கு பெற வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வாய்மொழி தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் கூட்டத்தினை கையால 18 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் மாநாட்டில் கலந்து கொள்ளும் நிர்வாகிகளுக்கு சைவ அசைவ உணவுகள் வழங்கப்படும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகள் மேம்பட வேண்டும்.. பா.ஜ.க நாகராஜ்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com