கமல்ஹாசன் விலை போய்விட்டார்.. அண்ணாமலை!

Annamalai: நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் ஒரு ராஜ்யசபா சீட்டுக்கு விலை போய்விட்டார் என அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

Published on: October 7, 2025 at 9:42 pm

சென்னை, அக்.7, 2025: நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களை சந்தித்துப் பேசினார். பின்னர் பேசிய அவர் இதற்கு நாம் தான் பொறுப்பு. ஒருவரை எப்படி குற்றஞ்சாட்ட முடியும்” என்றார். மேலும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை பெருமைப்படுத்தும் விதமாகவும் பேசி இருந்தார்.

இதற்கு, பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு முன்னாள் மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை எதிர்வினையாற்றியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “கமல்ஹாசன் ராஜ்யசபா சீட்டுக்காக விலை போய்விட்டார்” என்றார்.

விலை போன கமல்ஹாசன்

தொடர்ந்து பேசிய அண்ணாமலை, “கமல்ஹாசன் நீண்ட காலத்திற்கு முன்பே ஒரு ராஜ்யசபா சீட்டிற்காக தனது ஆன்மாவை விற்றுவிட்டார். கரூர் சம்பவத்துக்கு அரசை குற்றம்சாட்ட முடியாது என அவர் சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? என்றார். மேலும், “கமல்ஹாசன் என்ன பேசினாலும், தமிழக மக்கள் அவரை தீவிரமாக எடுத்துக்கொள்ளப் போவதில்லை” என்றார்.

இதையும் படிங்க :நடிகர் விஜய்க்கு வெளியே வர பயம்.. துரைமுருகன்

இஸ்ரேல், அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை.. ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை.!
Israeli airstrike on Iran

இஸ்ரேல், அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை.. ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை.!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர்

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com