Delhi | டெல்லியில் எல்.எல்.பி படித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
Delhi | டெல்லியில் எல்.எல்.பி படித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
Published on: September 6, 2024 at 1:04 pm
Delhi | டெல்லியில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் 3ஆம் ஆண்டு எல்.எல்.பி படித்துவந்த சென்னையை சேர்ந்த மாணவி அமிர்த வர்ஷினி தற்கொலை செய்துகொண்டார். இவர் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் எனக் கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
சென்னை அய்யப்பாக்கத்தை சேர்ந்த அமிர்த வர்ஷினி, டெல்லி துவாரகாவில் உள்ள தேசிய சட்டப் பல்லைக்கழகத்தில் எல்.எல்.பி 3ஆம் ஆண்டு படித்துவந்தார்.
இவர் புதன்கிழமை வகுப்பறைக்கு செல்லாமல் விடுதி அறையிலே இருந்துள்ளார். மேலும் உணவு உட்கொள்ளவும் வரவில்லை. அவரின் அறைக்கதவு பூட்டி இருந்துள்ளது.
இதையடுத்து ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அறைக் கதவை உடைத்துப் பார்த்த போது அவர் அமிர்த வர்ஷினி தூக்கிட்டு பிணமாக கிடந்துள்ளார்.
அவர் தனது தற்கொலை குறிப்பில், “தனது தற்கொலைக்கு யாரும் காரணவில்லை. இது என் சுய முடிவு” எனக் கூறியுள்ளார். அமிர்த வர்ஷினி உடல் உடற்கூராய்வுக்கு பின்னர் அவரின் பெற்றோரிடம் ஒபடைக்கப்பட்டது. இறுதிச் சடங்குகள் வாரணாசியில் நடைபெற உள்ளது.
Note : தற்கொலை எந்தப் பிரச்னைக்கும் தீர்வல்ல. தற்கொலை முடிவில் இருந்து விடுபட தமிழ்நாடு மாநில சுகாதாரத் துறை எண் 104, சினேகா தற்கொலை தடுப்பு மையம்- 044-24640050.
இதையும் படிங்க : ‘தஞ்சாவூரில் அடுத்தடுத்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள்’; தி.மு.க அரசுக்கு டி.டி.வி கண்டனம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com