Tirunelveli | திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி பொற்றையடி பகுதியை சேர்ந்தவர் மீனா. இவர் வள்ளியூர் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்துவருகிறார். இவர் அண்ணாநகர் பகுதியில் குப்பைகளை சேகரித்த போது, ராஜ்குமார் என்பவர் மனிதக் கழிவு கலந்த குப்பைகளை எடுக்க கூறியுள்ளார் .
அதற்கு மீனா மறுக்கவே அவரை திட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் துப்புரவு பணியாளர் அடுத்த தெருவில் பணியில் இருந்தபோது, அந்தக் கழிவுகளை குப்பைத் தொட்டியில் வீசி சென்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி வள்ளியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் அண்ணா நகர் ராஜ்குமார் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் புகார் குறித்து பேசிய ராஜ்குமார் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
எனினும், தனது பேரனின் மனிதக் கழிவுகளை கொட்டச் சென்றது எனது தவறுதான் என்றார். ஆனால் அவர் எடுக்கவில்லை. மேலும், அவர் என்னிடம் வேகமாக பேசினார். நான் அவரை திட்டவில்லை” என்றார். இந்தச் சம்பவம் வள்ளியூரில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதையும் படிங்க
நெல்லை கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளரை வெட்டி கொலை செய்த வழக்கில் ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது….
Tirunelveli | கோவில்பட்டி அருகே கார் விபத்தில் பத்திரிக்கை உரிமையாளர் உயிரிழந்தார்….
Tirunelveli | திருநெல்வேலியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 4 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது….
Tirunelveli | திருநெல்வேலி தலைமை காவலர் ஒருவர், பெண் ஒவருடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….
Tirunelveli | வள்ளியூர் நகராட்சியுடன் தெற்கு வள்ளியூர் ஊராட்சியை இணைக்க 23 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப் ட்விட்டர் இன்ஸ்டாகிராம்