Vikramasinga Raja | தமிழகத்தில் மீண்டும் சொத்து வரி உயர்த்தபபடும் என்ற தீர்மானத்துக்கு வணிகர் சங்க பேரமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் Ve.கோவிந்தராஜுலு விடுத்துள்ள அறிக்கையில், “தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் சொத்துவரி பல மடங்காக உயர்த்தப்பட்டது. வணிகக் கட்டிடங்களுக்கு கூடுதலாக வரி விதிக்கப்பட்டது. அதே நேரத்தில் மின் கட்டணமும் உயர்த்தப்பட்டது. சொத்துவரி உயர்வு மற்றும் மின் கட்டண உயர்வுகளால் தொழில் மற்றும் வர்த்தகத்துறையில் பல்வேறு வகையான பாதிப்புகள் ஏற்பட்டு, அந்த பாதிப்பு நுகர்வோரையும் சேர்த்து பணச்சுமை மற்றும் மனச்சுமைக்கு உள்ளாக்கியது.
அச்சூழலில் இருந்து இதுவரை மீண்டுவர இயலாத நிலையில் தற்போது சென்னை பெருநகர மாநகராட்சியில் சொத்துக்களின் மீது 6% கூடுதல் வரி விதிப்புக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.
கடந்த மாதம் பன்மடங்கு உயர்த்தப்பட்ட உரிமக்கட்டணமும், தொழில் வரியும் நீக்கப்பட வேண்டும் என்கின்ற பேரமைப்பின் கோரிக்கை நிலுவையில் இருக்கும் நிலையில், மீண்டும் சொத்துவரி உயர்வு என்பது வணிகர்களுக்கு மிகப்பெரும் சுமை என்பதை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தமிழக அரசுக்கு மிகவும் அழுத்தமாக தெரிவிக்க கடமைப்பட்டுள்ளது.
தொடர்ந்து ஏற்றப்படும் வரிச்சுமைகள் நிறைவாக நுகர்வோர்களையும், பொதுமக்களையும் பாதிப்புக்கு உள்ளாக்கி, இதனால் பொருட்களின் விலைவாசி உயர்வு ஏற்பட்டு, பொருளாதார தாக்கத்தை உருவாக்கும்.
மேலும், தொழில்-வணிக நலிவு காரணமாக வேலைவாய்ப்புகளும் பறிபோகும் நிலை உருவாகும்.
இது அரசுக்கு எதிர்ப்பான மனநிலையை வணிகர்கள், பொதுமக்கள் மத்தியில் உருவாக்கும் என்பதனால், உடனடியாக சொத்துவரி உயர்வை நிறுத்தி வைத்திட, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டுமென வணிகர்கள், நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் சார்பில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்துவதாக பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்” எனக் கூறியுள்ளார்.
Amazon Prime Day: 400க்கும் மேற்பட்ட சிறந்த இந்திய & உலகளாவிய பிராண்டுகள்; ஸ்மார்ட்போன்கள், மின்னணு & உபகரணங்கள், ஃபேஷன், அழகு, வீடு & சமையலறை, மளிகை…
Leela Hotels IPO: லீலா பேலஸ் ஹோட்டல்கள் ஐ.பி.ஓ முதலீடுக்கு இன்று (மே 25 2025) திறக்கப்படுகிறது. இந்த ஐ.பி.ஓ மே 31ஆம் தேதிவரை முதலீடுக்கு திறந்திருக்கும்…
Warren Buffetts 5 rules: முதலீட்டில் சிறந்து விளங்க லழிவகுக்கும் வாரன் பஃபடெ்டின் 5 விதிகள் இங்குள்ளன. இது முதலீட்டுக்கு உகந்தது என கருதப்படுகிறது….
Maruti Suzuki Q4 results: மாருதி சுசுகியின் நான்காம் காலாண்டு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.3,911 கோடியாக சரிந்தது காணப்படுகிறது….
Jan Dhan bank account: ஏப்ரல் 2025 நிலவரப்படி ஜன் தன் வைப்புத்தொகை ரூ.2.63 லட்சம் கோடியை எட்டியுள்ளது, சராசரியாக ஒரு கணக்கின் இருப்பு ரூ.4,760 ஆகும்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப் ட்விட்டர் இன்ஸ்டாகிராம்