Nirmala Sitaraman | தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக ஜனஅதிகார சங்கர்ஷ பரிஷத்தின் (ஜேஎஸ்பி) இணைத் தலைவர் ஆதர்ஷ் ஆர் ஐயர் என்பவர் தனிப்பட்ட புகார் ஒன்றை அளித்திருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி நட்டா உள்ளிட்டோர் மீது கர்நாடக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆதர்ஷ் என்பவர் தனது புகாரில் தேர்தல் பத்திரங்கள் மூலமாக ரூ.8 ஆயிரம் கோடிகள் வரை நிர்மலா சீதாராமன் பயனடைந்துள்ளார் எனத் தெரிவித்து இருந்தார். இந்தப் புகார் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள திலக் நகர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ளது. புகார் கடந்த மார்ச் மாதமே அளிக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.
ஏற்கனவே, நில மோசடி புகாரில் கர்நாடக முதல் அமைச்சர் சித்த ராமையா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது, தேர்தல் பத்திர விவகாரத்தில் மத்திய அமைச்சர்கள் மீது அவர் குற்றச்சாட்டை முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
Delhi assembly elections 2025: டெல்லியில் காங்கிரஸ் வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளது. இதில் முக்கியமாக ரூ.500க்கு எல்.பி.ஜி சிலிண்டர் கொடுப்போம் எனத் தெரிவித்துள்ளது….
Kerala | வயநாட்டில் பிரியங்கா காந்தி, ஜமாத்-இ-இஸ்லாமி ஆதரவில் போட்டியிடுகிறார் என கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் கூறியுள்ளார்….
Maharashtra Election | மகாராஷ்டிராவில் ரூ.3 லட்சம் விவசாயக் கடன்கள் தள்ளுபடி, மகளிருக்கு இலவச பயணம் உள்ளிட்ட வாக்குறுதிகளை காங்கிரஸ் அறிவித்துள்ளது….
Jharkhand Assembly Elections 2024 | ஜார்க்கண்ட் முக்தி மோர்சா, காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இடதுசாரிகள் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது…..
UP bypolls | உத்தரப் பிரதேச இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியில்லை என அறிவித்துள்ளது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப் ட்விட்டர் இன்ஸ்டாகிராம்