Tirunelveli | திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி பொற்றையடி பகுதியை சேர்ந்தவர் மீனா. இவர் வள்ளியூர் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்துவருகிறார். இவர் அண்ணாநகர் பகுதியில் குப்பைகளை சேகரித்த போது, ராஜ்குமார் என்பவர் மனிதக் கழிவு கலந்த குப்பைகளை எடுக்க கூறியுள்ளார் .
அதற்கு மீனா மறுக்கவே அவரை திட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் துப்புரவு பணியாளர் அடுத்த தெருவில் பணியில் இருந்தபோது, அந்தக் கழிவுகளை குப்பைத் தொட்டியில் வீசி சென்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி வள்ளியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் அண்ணா நகர் ராஜ்குமார் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் புகார் குறித்து பேசிய ராஜ்குமார் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
எனினும், தனது பேரனின் மனிதக் கழிவுகளை கொட்டச் சென்றது எனது தவறுதான் என்றார். ஆனால் அவர் எடுக்கவில்லை. மேலும், அவர் என்னிடம் வேகமாக பேசினார். நான் அவரை திட்டவில்லை” என்றார். இந்தச் சம்பவம் வள்ளியூரில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதையும் படிங்க
Theft at Fruits shop in Thisaiyanvilai : திசையன்விளையில் உள்ள பழக்கடையில் இருந்து பேட்டரி உள்ளிட்ட பொருள்களை இரவு நேரத்தில் மர்ம நபர் ஒருவர் திருடிச்…
Madras High Court: 1712 ஆம் ஆண்டு அப்போதைய மதுரை சமஸ்தான ஆட்சியாளரால் வழங்கப்பட்ட மானியத்தின் அடிப்படையில், நீதிபதி எம். தண்டபாணி 2.34 ஏக்கர் மட்டுமே அதற்கு…
Kadambankulam Ayya Vaikunda Temple: கடம்பன்குளம் அய்யா வைகுண்டர் திருத்தலத்தில் இன்று (ஜூலை 13 2025) ஆனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான அனுமன் வாகனப் பவனி நடைபெறும்….
Former Tirunelveli MP Soundararajan: முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை திருநெல்வேலி முன்னாள் எம்.பி சௌந்தரராஜன் சந்தித்தார்….
Radhapuram: ராதாபுரம் அருகே சட்டவிரோதமாக எம். சாண்ட் மணலை கடத்தியதாக லாரி ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப் ட்விட்டர் இன்ஸ்டாகிராம்