மாமல்லபுரம் அருகே கார் மோதிய விபத்தில் 5 பெண்கள் உயிரிழந்தனர்.
மாமல்லபுரம் அருகே கார் மோதிய விபத்தில் 5 பெண்கள் உயிரிழந்தனர்.
Published on: November 27, 2024 at 6:06 pm
Mahabalipuram Car Accident | சென்னை அருகே மாமல்லபுரம் பண்டித மேடு பகுதியின் இ. சி. ஆர். சாலை அருகே இன்று மதியம் 5 பெண்கள் மாடு மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது சாலையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று சாலையோரம் அமர்ந்து மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் ஐந்து பெண்களும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய காரை அப்பகுதியினர் சுற்றி வளைத்து பிடித்து சரமாரியாக தாக்கினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்போரூர் போலீசார் காரில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com