கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக “மொபைல் ஆப் TNSTC (Mobile App) Android / I phone கைபேசி மூலமாகவும்” முன் பதிவு செய்து கொள்ளலாம்
கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக “மொபைல் ஆப் TNSTC (Mobile App) Android / I phone கைபேசி மூலமாகவும்” முன் பதிவு செய்து கொள்ளலாம்
Published on: September 4, 2024 at 11:19 pm
Tamil Nadu | தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) லிட் நிர்வாக இயக்குனர் பொன்முடி விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “செப்.6 முதல் 8ஆம் தேதிவரை பொதுமக்களின் வசதிக்காக, திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊர்களிலிருந்து சென்னைக்கு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தொடர்ந்து, சென்னையில் இருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கு 200 பேருந்துகளும், திருச்சியிலிருந்து கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களுக்கும், கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களிலிருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கு 150 பேருந்துகள் என கூடுதலாக 350 சிறப்பு பேருந்துகள் வரை இயக்கப்பட உள்ளது.
இதையும் படிங்க : விநாயகர் சதுர்த்தி; மும்பைக்கு 342 சிறப்பு ரயில்கள்: இந்திய ரயில்வே அறிவிப்பு
அதே போன்று மேற்படி விடுமுறைக்கு வந்த பயணிகள் மீண்டும் அவரவர் ஊர்களுக்கு திரும்ப செல்ல 08.09.2024 மற்றும் 09.09.2024 ஞாயிறு, திங்கள் நாட்களில் சென்னை தடத்தில் 200 சிறப்பு பேருந்துகளும், பிறத்தடங்களிலும் 150 சிறப்பு பேருந்துகளும், இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
07.09.2024, 08.09.2024, நாட்களில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை காரணமாக பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கும் மற்றும் வேளாங்கண்ணி திருவிழாவிற்கு செல்ல வசதியாக பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக “மொபைல் ஆப் TNSTC (Mobile App) Android / I phone கைபேசி மூலமாகவும்” முன் பதிவு செய்து கொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com