
TTV Dhinakaran: “திருப்பூர் அருகே அரசுப்பள்ளி வளாகத்தில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட ஆசிரியர் மீது பெட்ரோல் ஊற்றி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பள்ளிக்கூடங்களை மதுபானக்கூடங்களாகவும், சட்டவிரோதிகளின் கூடாரமாகவும் மாற்றிய திமுக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது” என அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.