மகளிர் ஜுனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி ஜப்பானை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது.
மகளிர் ஜுனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி ஜப்பானை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது.
Published on: December 14, 2024 at 9:48 pm
Updated on: December 15, 2024 at 9:26 am
Women’s Junior Asia Cup 2024 | ஓமன் தலைநகர் மஸ்கட்டில் 9-வது பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி நடந்து வருகிறது.
இதில் லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் சீனா முதலிடமும், இந்தியா 2-வது இடமும், ‘பி’ பிரிவில் ஜப்பான்முதலிடமும், தென் கொரியா 2-வது இடமும் பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறின.
இன்று முதலாவது அரையிறுதி போட்டி நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, ஜப்பானை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்திய அணி சார்பில் மும்தாஜ் கான், சாக்ஷி ராணா மற்றும் திபீகா ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான சீனா – தென் கொரியா அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோதும்.
நாளை (டிசம்பர் 15, 2024) இந்திய நேரப்படி 8:30 மணியளவில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா சீனா அல்லது கொரியாவை இறுதிப் போட்டியில் எதிர்கொள்ளும்.
இதையும் படிங்க கேரள லாட்டரி : ரூ. 80 லட்சம் வென்ற அதிர்ஷ்டசாலி யார் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com