Syed Modi International 2024 | உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள பாபு பனாரசி தாஸ் உள்விளையாட்டு அரங்கில் இன்று (சனிக்கிழமை) நடந்த BWF வேர்ல்ட் டூர் சூப்பர் 300 போட்டியான சையத் மோடி இந்தியா இன்டர்நேஷனல் போட்டியில் இந்திய ஷட்லர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
குறிப்பாக இந்திய பேட்மிட்டன் வீராங்கனை பி.வி சிந்து, வீரர் லக்ஷயா சென் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அரையிறுதி போட்டியில் உன்னதியை எதிர்கொண்ட பிவி சிந்து, (21-12, 21-9) என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். அதேபோல் லக்சயா வும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி தித்திப்பான வெற்றியை பதிவு செய்தார்.
இந்த போட்டியில் இறுதி ஆட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணிக்கு நடைபெறுகிறது. இதில் பி.வி. சிந்து சீன வீராங்கனையான வு லுயோ யூ, என்பவரை எதிர்கொள்கிறார். இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க உலக செஸ் சாம்பியன்ஷிப் : குகேஷ் – டிங் லிரென் கடும் போட்டி
Gautam Gambhir: ‘கௌதம் கம்பீர் குறித்து நாங்கள் எந்த முடிவும் எடுக்க மாட்டோம், தேர்வாளர்கள் மற்றும் அணியுடன் பேசுவோம்’ என இந்திய அணியின் தோல்விக்குப் பிறகு பி.சி.சி.ஐ…
Virat Kohli: இந்திய கிரிக்கெட்டர் விராத் கோலி, மகேந்திர சிங் தோனியின் சொந்த நகருக்கு சென்றுள்ளார்….
Indian women’s cricket team: உலக கோப்பையை வென்ற மகளிர் கிரிக்கெட் அணிக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) ரூ.51 கோடி பரிசுத் தொகையை அறிவித்துள்ளது….
Indian women’s cricket team: உலக கோப்பை இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை வென்று கோப்பையை தனதாக்கியது இந்தியா….
Womens World Cup 2025 : ஆஸ்திரேலியா வீராங்கனை அலிஸாவின் கேட்ச்சை நழுவ விட்டு அதிர்ச்சி கொடுத்தார் இந்திய வீராங்கனை ஹர்மன் ப்ரீத்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்