நியூசிலாந்துக்கு எதிரான அடுத்த போட்டியில் முகமது சிராஜ்-க்கு பதிலாக ஆகாஷ் தீப் வருவதைப் பற்றி யோசிக்க வேண்டும் என முன்னாள் வீரர் சபா கரீம் விமர்சித்துள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான அடுத்த போட்டியில் முகமது சிராஜ்-க்கு பதிலாக ஆகாஷ் தீப் வருவதைப் பற்றி யோசிக்க வேண்டும் என முன்னாள் வீரர் சபா கரீம் விமர்சித்துள்ளார்.
Published on: October 20, 2024 at 8:08 pm
Saba Karim | இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. நியூசிலாந்துக்காக சிறப்பாக பேட்டிங் செய்த ரச்சின் ரவீந்திரா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
இதனால், 3 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் 1-0 என நியூசிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது. 2வது டெஸ்ட் வரும் 26ம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான அடுத்த போட்டியில் முகமது சிராஜ்-க்கு பதிலாக இங்கிலாந்து மற்றும் வங்கதேச தொடரில் சிறப்பாக ஆடிய ஆகாஷ் தீப்பை கொண்டு வருவதைப் பற்றி இந்தியா யோசிக்க வேண்டும் என முன்னாள் வீரர் சபா கரீம் விமர்சித்துள்ளார்.
அவர் கூறுகையில், முகமது சிராஜ் அழுத்தத்தின் கீழ் இருப்பதாக கணிக்கிறேன். அதனால் அடுத்த டெஸ்ட் போட்டிக்கு முன் பிளேயிங் லெவன் பற்றி இந்திய அணி விவாதிப்பார்கள். ஏனெனில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் புதிய பந்தில் விக்கெட்டை எடுத்துக் கொண்டு, 2வது ஸ்பெல்லில் 2வது புதிய பந்தில் நன்றாக வீசுவார் என்று எதிர்பார்க்கிறீர்கள். சிராஜ் அதை செய்ததாக தெரியவில்லை.
ஆகாஷ் தீப் கடந்த போட்டிகளில் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை பெற்றுக் கொடுத்தார். இந்திய சூழ்நிலைகளில் பந்து வீசிய அனுபவத்தை அவர் நிறைய கொண்டுள்ளார். ஏனெனில் பெங்கால் அணிக்காக அவர் பல வருடங்கள் உள்ளூரில் விளையாடியுள்ளார். எனவே அது போன்ற உயிரற்ற பிட்ச்களில் பந்து வீசும் அனுபவம் கொண்டவர் உங்களுக்குத் தேவை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com