ஈட்டி எறிதலில் புதிய புயல்; நீரஜ் சோப்ராவை முந்திய இலங்கை வீரர்.. யார் இந்த ரூமேஷ்?

Rumesh Pathirage : ரோம் டயமண்ட் லீக் தடகள போட்டியில் இலங்கையின் இளம் ஈட்டி எறிதல் வீரர் ரூமேஷ் தரங்கா பதிரகே உலக தடகள ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

Published on: June 6, 2026 at 12:01 pm

Updated on: June 6, 2026 at 12:11 pm

ரோம், ஜுன் 6 2026: இத்தாலி ரோம் நகரில் நடைபெற்ற டைமண்ட் லீக் போட்டியில், இலங்கை வீரர் ரூமேஷ் தரங்கா பதிரக 92.62 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து, ஆசியாவின் இரண்டாவது நீளமான ஈட்டி எறிதல் சாதனையை படைத்தார்.

வரலாற்று சாதனை

இதன் மூலம் இந்தியாவின் நீரஜ் சோப்ராவையும் (90.23 மீ.), சீன தைப்பேயின் சாவ்-சுன் செங் (91.36மீ) சாதனையையும் முறியடித்துள்ளார். மேலும், பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் (92.97)படைத்துள்ள ஆசிய சாதனைக்கு வெறும் 35 செ.மீ. மட்டுமே பின்தங்கியுள்ளார்.

மேலும் இது, ரூமேஷின் 92.62 மீட்டர் எறிதல், உலகின் எட்டாவது நீளமான எறிதல் ஆகும். மேலும், ஆசியாவில் 90 மீட்டர் தடையை கடந்த நான்காவது வீரராக உயர்ந்துள்ளார்.

ரோம் டயமண்ட் லீக் போட்டியில் இருமுறை உலக சாம்பியனான ஆண்டர்சன் பீட்டர்ஸ், உலக சாம்பியன் கேஷோர்ன் வால்காட் உள்ளிட்ட முன்னணி வீரர்களை பின்னுக்குத் தள்ளி பதிரகே ஆதிக்கம் செலுத்தினார். இந்திய வீரர் சச்சின் யாதவ் தனது முதல் டயமண்ட் லீக் போட்டியில் 79.18 மீட்டர் மட்டுமே எறிந்து 8-வது இடம் பிடித்தார்.

கிரிக்கெட் முதல் ஈட்டி எறிதல் வரை

ரூமேஷ் ஆரம்பத்தில் கிரிக்கெட்டில் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக விரும்பினார். 2019-இல் தேசிய வேகப்பந்து தேர்வில் இரண்டாம் இடம் பெற்றார். பின்னர் தந்தையின் வழிகாட்டுதலுடன் ஈட்டி எறிதல் பயிற்சியைத் தொடங்கினார். 2023-இல் 76.45m இருந்த தனிப்பட்ட சாதனை, 2026-இல் 92.62m ஆக உயர்ந்துள்ளது.

நீரஜ்-பதிரகே மோதல்

இதுவரை நீரஜ் சோப்ராவும் பதிரகவும் இருமுறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற என்சி கிளாசிக் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்ற நிலையில், பதிரகே மூன்றாவது இடம் பிடித்தார்.

தற்போது காயத்திலிருந்து மீண்டு வரும் நீரஜ் சோப்ரா தற்போது சுவிட்சர்லாந்தில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அவர் எப்போது போட்டியில் பங்கேற்பார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருவரும் கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுகள் (ஜூலை-ஆகஸ்ட்) மற்றும் ஆசிய விளையாட்டுகள் ஜப்பான் (செப்டம்பர்-அக்டோபர்) போட்டிகளில் மோத வாய்ப்பு உள்ளது.

இதையும் படிங்க நார்வே சதுரங்கத்தில் வெற்றி.. முதல் இந்தியர்.. வரலாறு படைத்த பிரக்ஞானந்தா!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com