வங்க தேசத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரவிச்சந்திர அஸ்வன் சதம் அடித்தார்.
![ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்](https://dravidantimes.com/wp-content/uploads/elementor/thumbs/Air-india-express-qzgfrz3uwic5xvtqaing9mfg1dx9vr5kwapxfio77s.png)
February 6, 2025
வங்க தேசத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரவிச்சந்திர அஸ்வன் சதம் அடித்தார்.
Published on: September 19, 2024 at 8:19 pm
Ravichandran Ashwan | இந்திய கிரிக்கெட் அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் இன்று (செப்.19, 2024) சென்னையில் உள்ள எம். சிதம்பரம் ஸ்டேடியத்தில் வங்கதேசத்துக்கு எதிராக விளையாடும் போது தனது ஆறாவது டெஸ்ட் சதத்தை அடித்தார்.
1️⃣5️⃣0️⃣-run partnership between @ashwinravi99 and @imjadeja and it takes #TeamIndia past the 3️⃣0️⃣0️⃣-run mark. 💪💪 #TeamIndia https://t.co/jV4wK7BOKA… #INDvBAN @IDFCFIRSTBank pic.twitter.com/G6gZ7kmlAQ
— BCCI (@BCCI) September 19, 2024
அஷ்வினுக்கு, வங்கதேசத்துக்கு எதிராக இது அவரது முதல் சதம் ஆகும். மேலும், சேப்பாக்கத்தில் அவர் அடித்த இரண்டாவது தொடர்ச்சியான சதமாகும். அஸவினினின் 5வது சதம் 2021 இல் இங்கிலாந்துக்கு எதிராக வந்தது. இந்தப் போட்டியும் சென்னையில் நடந்தது.
A stellar TON when the going got tough!
— BCCI (@BCCI) September 19, 2024
A round of applause for Chennai's very own – @ashwinravi99 👏👏
LIVE – https://t.co/jV4wK7BgV2 #INDvBAN @IDFCFIRSTBank pic.twitter.com/j2HcyA6HAu
சேப்பாக்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் போது வங்கதேச அணியின் பந்துவீச்சு தாக்குதலில் இந்திய வீரர்கள் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் (118 பந்தில் 56) மற்றும் ரிஷப் பந்த் (52 ரன்களில் 39) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். மேலும், கேப்டன் ரோகித் சர்மா (6), ஷுப்மான் கில் (0), விராட் கோலி (6), கேஎல் ராகுல் (16) ஆகியோரும் சோபிக்கவில்லை.
Magnificent CENTURY by @ashwinravi99 👏👏
— BCCI (@BCCI) September 19, 2024
This is his second Test century at his home ground and 6th overall.
Take a bow, Ash!
LIVE – https://t.co/jV4wK7BgV2…… #INDvBAN@IDFCFIRSTBank pic.twitter.com/VTvwRboSxx
இதனால், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஆடுகளத்திற்குள் நுழைந்தபோது, இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்திருந்தது.
இவர்கள் இருவரும் வங்கதேச பந்துவீச்சாளர்களைக் கட்டுப்படுத்தி, நிலைமைகளைப் புரிந்துகொண்டு நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 80 ஓவர்களில் 339/6 ரன்களை எட்டியுள்ளது. ரவிச்சந்திர அஸ்வின் 102 ரன்னுடனும், ஜடேஜா 86 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க : காமன்வெல்த் யூத் சாம்பியன்ஷிப்: 11 தங்கம் வென்ற இந்திய வீரர்கள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com