Republic Day 2026 Celebrations: இந்திய கண் பார்வைதிறன் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணித் தலைவர் தீபிகாவுக்கு குடியரசு தினத்தில் பங்குக்கொள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அழைப்பு விடுத்துள்ளார்.
Republic Day 2026 Celebrations: இந்திய கண் பார்வைதிறன் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணித் தலைவர் தீபிகாவுக்கு குடியரசு தினத்தில் பங்குக்கொள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அழைப்பு விடுத்துள்ளார்.

Published on: January 13, 2026 at 6:47 pm
புதுடெல்லி, ஜன.13, 2026: குடியரசு தின விழாவில் பங்கேற்பது மறக்க முடியாத அனுபவம் என தீபிகா கூறியுள்ளார்.
இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, 2026 ஜனவரி 26ஆம் தேதி புதுடெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள இந்திய கண் பார்வை திறனற்றோர் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் கேப்டன் தீபிகாவை அழைத்துள்ளார்.
அந்த அழைப்பிதழை, ஆந்திரப் பிரதேசம், ஸ்ரீ சத்திய சாய் மாவட்டம், அமராபுரம் மண்டலத்தில் உள்ள தீபிகாவின் சொந்த ஊரான தம்பளஹட்டியில் தபால் அதிகாரிகள் நேரில் சென்று வழங்கினர்.
இந்த அழைப்பை பெற்றதற்கு மகிழ்ச்சி தெரிவித்த தீபிகா, “இந்திய குடியரசுத் தலைவரிடமிருந்து அழைப்பு பெறுவது பெருமையான தருணம். நேரில் குடியரசு தின விழாவில் பங்கேற்பது மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். இது மிகப் பெரிய கௌரவம்” என்று கூறினார்.
இதையும் படிங்க: டெல்லியில் பாரா ஸ்போர்ட்ஸ் போட்டிகள்.. வெற்றியாளர்கள் முழு விவரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com