Joe Root hits double hundred | உலகளவில் 20,000 ரன்களை கடந்த 13வது வீரர் என்ற பெருமையை இங்கிலாந்தின் ஜோ ரூட் பெற்றுள்ளார். மேலும், சர்வதேச கிரிக்கெட்டில் 20,000 ரன்களை கடந்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 259 ரன்கள் குவித்த நிலையில் இந்தச் சாதனையை அவர் படைத்தார்.
இந்தப் போட்டியில், ஜோ ரூட் 305 பந்துகளில் இரட்டை சதம் அடித்தார். இது, பாகிஸ்தானில் இவரது முதல் டெஸ்ட் சதம் ஆகும். தற்போது, ஜோ ரூட் இங்கிலாந்தில் அதிக இரட்டை சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் 6 இரட்டை சதத்துடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். இந்தப் பட்டியலில் வால்டர் ஹாம்மோண்டு 7 இரட்டை சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
இன்றைய போட்டியில், ஜோ ரூட் 4-வது நாளில் 183 ரன்களை கடந்தபோது, சர்வதேச கிரிக்கெட்டில் 20,000 ரன்கள் எடுத்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையையும் பெற்றார். விராட் கோலிக்குப் பிறகு விளையாட்டின் மூன்று வடிவங்களிலும் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது சர்வதேச கிரிக்கெட் வீரர் ரூட் ஆனார்.
தற்போது, விராத் கோலி 27,041 ரன்களுடன் முதலிடத்திலும், ஜோ ரூட் 20 ஆயிரம் ரன்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளார். விராத் கோலிொத்தம் 535 போட்டிகள் ஆடியுள்ள நிலையில் ஜோ ரூட் 350 போட்டிகள் மட்டுமே ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க மீண்டும் பறந்த தொப்பி; திடீர் ராஜினாமா: பாபர் அசாம் பதில் என்ன?
Neeraj Chopra wedding : ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ரா தனது திருமண புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்….
Gautam Gambhir Blames Sarfaraz Khan | மும்பை பேட்ஸ்மேன் சில தகவல்களை ஊடகங்களுக்கு கசியவிட்டதாக கௌதம் கம்பீர் பிசிசிஐ மறுஆய்வுக் கூட்டத்தில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனினும்,…
2024 Gukesh Earnings | இந்திய செஸ் நட்சத்திரம் 2024ஆம் ஆண்டில் ரூ.13.6 கோடி சம்பாதித்துள்ளார். இது, அமெரிக்க ஜனாதிபதியின் வருடாந்திர சம்பளத்தை விட இரண்டு மடங்கு…
Jagbir Singh | நாட்டின் முன்னாள் ஹாக்கி பயிற்சியாளர் ஜக்பீர் சிங் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்