Commonwealth Youth Championship | காமன்வெல்த் இளையோர் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய இளம் வீரர்கள் 11 தங்கங்கள் வரை வென்றுள்ளனர்.
Commonwealth Youth Championship | காமன்வெல்த் இளையோர் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய இளம் வீரர்கள் 11 தங்கங்கள் வரை வென்றுள்ளனர்.
Published on: September 19, 2024 at 8:12 pm
Commonwealth Youth Championship | 2024 ஆண்டுக்கான காமன்வெல்த் யூத் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி பதக்கங்களை பெற்று வருகின்றனர்.
ஜூனியர் மற்றும் சீரியர்களுக்கான (ஆண்கள் மற்றும் பெண்கள்) வெயிட்லிப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வெயிட்லிப்டர்கள் 11 தங்கம் மற்றும் 3 வெள்ளி பதக்கங்களுடன் சிறந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
49கிலோ “யூத் மென்ஸ்” பிரிவில், பாபுலால் ஹெம்ப்ரோம் 114கிலோ எடையை தூக்கி காமன்வெல்த் மற்றும் தேசிய சாதனையை முறியடித்துள்ளார். 55கிலோ ‘யூத் விமன்ஸ்’ பிரிவில், மினா சாந்தா ஸ்னாட்ச் பிரிவில் 81 கிலோ எடையும், கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 99 கிலோ எடையுடன் மொத்தம் 180 கிலோ எடையுடன் தேசிய சாதனையை முறியடித்தார்.
73 கிலோ ‘யூத் மென்ஸ்’ பிரிவில், பெடபரத் பரலி ஸ்னாட்ச், கிளீன் & ஜெர்க் பிரிவில் தேசிய சாதனை படைத்துள்ளார். மொத்தமாக 200 கிலோ எடையைக் கடந்து சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஜியோஷ்னா சபர், அகன்க்ஷா வியாவஹரே, அஷ்மிதா தோன், பார்கவி பி, ஏ மகாராஜன், வி கிஷோர், டி மாதவன் மற்றும் போலோ யாலம் ஆகியோரும் தங்கம் வென்று அசத்தியுள்ளனர். இந்த சாம்பியன்ஷிப் போட்டி செப்டம்பர் 21-ஆம் தேதி நிறைடைகிறது.
இதையும் படிங்க: இனி ஆண், பெண் வேறுபாடு இல்லை; ஒரே பரிசுத்தொகை தான்: ஐ.சி.சி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com