மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி தொடரில் லீக் ஆட்டத்தில் தொடர்ந்து அணிகளை வீழ்த்தி இந்திய அணி ஹாட்ரிக் வெற்றியை பதவு செய்துள்ளது.
மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி தொடரில் லீக் ஆட்டத்தில் தொடர்ந்து அணிகளை வீழ்த்தி இந்திய அணி ஹாட்ரிக் வெற்றியை பதவு செய்துள்ளது.
Published on: November 15, 2024 at 5:57 pm
Womens Asian Champions Trophy 2024 | 8-வது மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி பீகாரில் ராஜ்கிர் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியா மற்றும் ஜப்பான், மலேசியா, தாய்லாந்து, தென் கொரியா, சீனா, ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன. முதல் லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதில், முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
இதில் இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் மலேசியாவையும், 2-வது ஆட்டத்தில் தென் கொரியாவையும் வீழ்த்தி சிறப்பான தொடக்கத்துடன் விளையாடி வருகிறது. இந்நிலையில், இந்திய அணி தனது 3-வது ஆட்டத்தில் தாய்லாந்துடன் மோதியது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி ஆடிய இந்திய அணி வீராங்கனைகள் கோல் மழை பொழிய செய்தனர். இறுதியில், இந்திய அணி 13-0 என்ற கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது.
இந்தியா தரப்பில் அதிகபட்சமாக தீபிகா 5 கோல்களும், பிரீத்து துபே, மனிஷா சவுஹான் மற்றும் லால்ரெம்சியாமி தலா 2 கோல்களும், பியூட்டி டங்டங் & நவ்னீத் கவுர் தலா 1 கோலும் அடித்தனர்.
நாளை நடைபெறும் 4-வது ஆட்டத்தில் இந்திய அணி பலம் வாய்ந்த சீன அணியை எதிர்கொள்கிறது.
இதையும் படிங்க டி20 வரலாற்றில் முதல் முறை ; உலக சாதனை படைத்த இந்தியா ; என்ன தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com